லண்டனில் வடிவேலு: தொடங்கியது படப்பிடிப்பு

லண்டனில் வடிவேலு: தொடங்கியது படப்பிடிப்பு

1 mins read
2994ede2-9383-4076-a489-cfcd593e0bfd
-

நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு வடி­வேலு நடிக்­கும் படம் 'நாய் சேகர் ரிட்­டர்ன்ஸ்'. சுராஜ் இயக்­கும் இந்­தப் படத்தை லைகா நிறு­வ­னம் தயா­ரிக்­கிறது. இந்­நி­லை­யில், இப்­படத்­தின் படப்­பி­டிப்பு லண்­ட­னில் தொடங்கி உள்­ளது.

படப்­பி­டிப்­புக்கு முன்பு இயக்கு­நர் சுராஜ், வடி­வேலு உள்­ளிட்­டோர் எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, இப்­ப­டத்­துக்கு இசை­ய­மைக்­கும் சந்­தோஷ் நாரா­ய­ண­னும் லண்­ட­னில்­தான் உள்­ளா­ராம். அங்­கி­ருந்­த­ப­டியே பாடல்­களுக்கு மெட்­ட­மைத்து, அதற்கு இயக்­கு­ந­ரி­டம் ஒப்­பு­தல் பெற உள்­ளார்.

நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு வடி­வே­லு­வி­டம் உற்­சா­கம் தெரி­கிறது என்­றும் இந்­தப் படத்­தில் அவ­ரது இயல்­பான நகைச்­சுவை வெளிப்­படும் என்­றும் படக்­குழு நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது.

'நாய் சேகர்' என்ற தலைப்பில் நடிகர் சதீஷ் நடித்து முடித்துள்ளார்.