'மாநாடு' திரைப்படம் எதிர்வரும் 24ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன, வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நாயகன் சிம்பு, வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பெரும்பாலானோர் பாராட்டி உள்ளனர். இந்த வரவேற்பை அடுத்து ஓடிடி தளத்திலும் அப்படத்தை வெளியிடுகின்றனர்.
'மாநாடு' செயற்கைக்கோள் உரிமையும் பெரிய தொகைக்கு விலைபோயுள்ளதாகத் தகவல்.
'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற தலைப்பில் புதுப்படம் ஒன்று உருவாகி வரும் நிலையில், அந்தத் தலைப்பை மாற்ற வேண்டும் என காலஞ்சென்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாரிசுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் அண்மையில் வெளியிட்டார். இந்நிலையில், ஜெயகாந்தனை யும் அவரது எழுத்துகளையும் உண்மையாக மதிப்பவர்கள் இத்தலைப்பை வேறொரு கதைக்கோ, சினிமாவுக்கோ தலைப்பாக மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள் என நம்புவதாகவும் ஜெயகாந்தனின் மகள்கள், மகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

