'ஐந்து மொழிகள் தெரியும்'

'ஐந்து மொழிகள் தெரியும்'

3 mins read
183211b5-a90c-4985-8980-99f4c5901543
-

சிவ­கார்த்­தி­கே­ய­னு­டன் 'ஹீரோ', சிம்­பு­வு­டன் 'மாநாடு', மோகன்­லாலு­டன் 'மரைக்­கா­யர் - அர­பிக்­க­ட­லின் சிங்­கம்' என அடுத்­தடுத்து முன்­னணி நாய­கர்­க­ளின் படங்­களில் நடித்து வரு­கிறார் கல்­யாணி பிரி­ய­தர்­ஷன்.

தென்­னிந்­திய சினி­மா­வின் முக்­கிய இயக்­கு­ந­ரான பிரி­ய­தர்­ஷன், நடிகை லிசி ஆகி­யோ­ரின் மகள், உதவி இயக்­கு­நரா­கப் பணி­யாற்­றிய அனு­ப­வம், சிறு வயது முதல் படப்­பிடிப்புத் தளத்­தி­லேயே பெரும்­பா­லான பொழு­தைக் கழித்­தது என எல்­லா­மும் சேர்ந்து கல்­யா­ணியை ஒரு திரைப்­பட நடி­கை­யாக நம் கண்முன்னே நிற்க வைத்­தி­ருக்­கிறது.

"சிறு வயது முதல் எனக்­குத் தெரிந்த ஒரே விஷ­யம் சினிமாதான். பள்ளி விடு­முறை நாள்­க­ளி­லும்கூட எங்­கா­வது வெளியே சென்று வர வேண்­டும் என்று தோன்­றாது. அப்­போது எல்­லாம் படப்­பி­டிப்பு தளத்­தில்­தான் இருப்­பேன். அது­தான் எனக்­குப் பிடிக்­கும்.

"சினிமா ஆர்­வம் சூழத்­தான் என் வாழ்க்கை தொடங்­கி­யது. அது­தான் உண்மை. அந்த ஆர்வம்­தான் என்னை நடி­கை­யாக மாற்­றி­ உள்ளது.

"எனி­னும், திரை­யு­ல­கில் நான் யார் என்­பதைக் கண்­ட­றிய கொஞ்­சம் கால அவ­காசம் தேவைப்­பட்­டது. இப்­போது அது­கு­றித்த ஒரு தெளி­வும் புரி­த­லும் ஏற்­பட்­டுள்­ளது," என்கிறார் கல்­யாணி.

என்­ன­தான் இவ­ருக்கு ஆர்­வம் இருந்­தா­லும், எடுத்த எடுப்­பி­லேயே மகளை சினிமாத்­து­றை­யில் கால்­ப­திக்க விட­வில்லை பிரி­ய­தர்­ஷன். முத­லில் அமெ­ரிக்காவில் கட்டடக்­கலை, கலை இயக்­கம் தொடர்­பாக படிக்க வைத்­துள்­ளார்.

கார­ணம், நடி­கை­யா­வ­தை­விட, தொழில்­நுட்­பக் கலை­ஞ­ராக திரை­யு­ல­கில் சாதிக்க வேண்­டும் என்­ப­து­தான் கல்­யா­ணி­யின் விருப்­ப­மாக இருந்­துள்­ளது.

படிப்பை முடித்த கையோடு தாய்­நாடு திரும்­பி­ய­வர், கலை இயக்­கு­நர் சாபு சிரில் அணி­யில் உத­வி­யா­ள­ராக இணைந்­துள்­ளார். 'கிரிஷ்', 'இரு­மு­கன்' ஆகிய படங்­களில் பணி­யாற்­றி­னா­ராம்.

"எப்­ப­டி­யா­வது பெரிய கலை இயக்கு­ந­ராக வேண்­டும் என்று விரும்­பி­னேன். அதற்கு ஏற்­றாற்­போல் சில திட்­டங்­களை­யும் வகுத்து வைத்­தி­ருந்­தேன்.

"ஆனால் நாம் ஒரு கணக்கு போட்டால், தெய்­வம் வேறு திட்­டத்தை வைத்­திருக்­கும் என்­பார்­கள் அல்­லவா, அது­தான் என் வாழ்க்­கை­யில் நடந்­தது.

"அம்­மா­வுக்கு நானும் அவ­ரைப்போல் நடி­கை­யாக வேண்­டும் என்று ஆசை. அப்­பா­வுக்கு எந்­த­வித எதிர்­பார்ப்­பும் இல்லை. சினி­மா­வில் எது பிடித்­தி­ருக்­கிறதோ, அதை தேர்வு செய்து சாதிக்­கப் பார் என்று கூறிவிட்­டார்.

"மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு தெலுங்­குப் பட வாய்ப்பு தேடி­வந்­தது. அதில் நடித்த பிறகு நானே எதிர்­பா­ராத வகை­யில் ஏரா­ள­மான வாய்ப்­பு­கள் தேடி­வந்­தன. அத­னால் தெலுங்­கில் ஒரு நடிகை­யா­கவே நீடிப்­போம் என்று முடிவு செய்­தேன். கார­ணம், பெரும்­பா­லான தெலுங்­குப் படங்­களில் கதா­நா­ய­கி­க­ளுக்கு நடிப்பை வெளிப்­படுத்­தும் வாய்ப்­பு­கள் அமை­யாது. மேலும் புது­மு­கம் என்­ப­தால் நம் மீது ரசி­கர்­க­ளுக்­குப் பெரிய எதிர்­பார்ப்­பு­கள் இருக்­காது.

"எனி­னும் அம்மா, அப்பா இரு­வருமே திரை­யு­ல­கில் முத்­திரை பதித்­த­வர்­கள். அவர்­க­ளுக்கு உள்ள மரியாதை­யைக் காப்­பாற்ற வேண்­டும். இந்­தப் பொறுப்­புக்­காக நிறைய உழைக்க வேண்டி இருந்­தது," என்கி­றார் கல்­யாணி பிரி­ய­தர்­ஷன்.

தமி­ழில் 'மாநாடு', மலை­யா­ளத்­தில் 'மரைக்­கா­யர் - அர­பிக்­க­ட­லின் சிங்­கம்' என்று இவர் நடித்து அண்­மை­யில் வெளி­யீடு கண்ட இரண்டு படங்­கள் வசூ­லில் அசத்தி உள்­ளன. அதி­லும், மலை­யா­ளப் படத்தை இயக்­கி­யது கல்­யா­ணி­யின் தந்தை பிரி­ய­தர்­ஷன்.

"அப்பா படம் என்­ப­தால் சுதந்­தி­ர­மாக இருக்க முடி­ய­வில்லை. உண்­மை­யில் அவர் முன்னால் நடிக்க பயந்­தேன். படம் வெற்­றி பெற்றதில் அப்பாவுக்­கும் சேர்த்து இரட்­டிப்பு மகிழ்ச்சி அடைந்­துள்­ளேன். 'மாநாடு' படத்­தில் சொந்­தக் குரலில் பேசி நடித்­துள்­ளேன்.

"என் தாய்­மொழி மலை­யா­ளம். ஆனால், சிறு வய­தில் பெரும்­பா­லும் சென்­னை­யில் இருந்­த­தால் தமிழ் பேசி வளர்ந்­தேன். இந்தித் திரையுலகில் என் பணியைத் தொடங்கி, தெலுங்­கில் நடி­கை­யாக அறி­மு­க­மா­னேன். அமெரிக்­கா­வில் படித்ததால் ஆங்கிலம் தெரியும். இவற்றுள் சில மொழி­கள் ஓர­ளவு தெரி­யும்," என்­கி­றார் கல்­யாணி.

, :   