81 நிமிடங்களில் உருவான படம்

81 நிமிடங்களில் உருவான படம்

2 mins read
1b2d6d83-015e-49cd-985e-6384e20a2139
படக்குழுவினருடன் இயக்குநர் பாக்யராஜ். -

தமிழ் சினிமா உல­கில் சத்­த­மின்றி சில சாத­னை­கள் படைக்­கப்­பட்டு வரு­கின்­றன. பார்த்­தி­ப­னின் 'ஒத்­த­செ­ருப்பு' படம் உலக அள­வில் பேசப்­ப­டு­கிறது. ஒரு கோடி ரூபாயில் படம் எடுத்த நிலை மாறி, கோடம்­பாக்­கத்­தில் தயா­ரிக்­கப்­படும் படத்­தில் ஐநூறு கோடி ரூபாய் முத­லீடு செய்ய வெளி­நாட்­ட­வர்­கள் காத்­தி­ருக்­கி­றார்கள்.

இந்­நி­லை­யில் 81 நிமி­டங்­களில் ஒரு படத்தை முழு­மை­யாக எடுத்து முடித்­தி­ருக்­கி­றார்­கள். படத்­தின் தலைப்பு '3.6.9'.

அறிமுக இயக்­கு­நர் சிவ மாதவ் இயக்கி­யுள்ள இப்­ப­டத்­தில் கே.பாக்­ய­ராஜ் முதன்­மைக் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார். பிளாக் பாண்டி, அஜய் கண்­ணன், சுகைல், சத்தி மகேந்­திரா ஆகி­யோ­ரும் உள்­ள­னர். கார்த்­திக் ஹர்ஷா இசை அமைத்­துள்­ளார்.

முதல் காட்சி தொடங்­கிய பின்­னர் இடை­வி­டா­மல் அடுத்­த­டுத்த காட்­சி­க­ளைப் பட­மாக்கி உள்­ள­தா­கச் சொல்­கி­றார் சிவ மாதவ்.

"மொத்­தம் 81 நிமி­டங்­கள் இடை­வி­டா­மல் படப்­பி­டிப்பை நடத்தி முடித்­தோம். இது நிச்­ச­யம் பெரும் சாதனைதான். புது­வை­யில் உள்ள புனித ஆரோக்­கிய அன்னை ஆல­யத்­தில் காலை 11.40 மணிக்குத் தொடங்கி மதி­யம் 1.01 மணி வரை தொடர்ச்­சி­யாக 81 நிமி­டங்­கள் படப்­பி­டிப்பை நடத்­தி­னோம்.

"ஒரே நேரத்­தில், ஒரு களத்­தில் 24 கேம­ராக்­கள் மூலம் காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்­டன. படப்­பி­டிப்­புக்­காக 150க்கும் மேற்­பட்ட நடி­கர், நடி­கை­களும் 450 பணி­யா­ளர்­களும் தயார் நிலை­யில் இருந்­த­னர்," என்­கி­றார் இயக்­கு­நர் சிவ மாதவ்.

உலக சாத­னை­க­ளைப் பதிவு செய்­யும் நிறு­வ­னங்­க­ளுக்கு இப்­படம் குறித்த விவ­ரங்­கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­ன­வாம். சண்டை, பாடல் காட்­சி­கள் இல்லை. எனி­னும் படத்தை திரை­யில் காணும்­போது அனைத்து பொழு­து­போக்கு அம்­சங்­களும் இடம்­பெற்­றுள்ள உணர்வு ஏற்­படும் என்­கி­றார் இயக்­கு­நர்.