திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
2151f344-eb43-4b18-8eb2-4a268dc7a6fc
-
multi-img1 of 2

 ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திப் படத்தில் நடிக்க உள்ளார் ராஷி கண்ணா (படம்). அவர் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திப் படம் மூலமாகத்தான் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்குப் படங்களில் மாறிமாறி நடித்தவர், மீண்டும் இந்திப் பக்கம் போகவில்லை. இந்நிலையில் சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாக நடிக்கும் படத்தில் ராஷியை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்துக்கு 'யோதா' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் 2022 நவம்பர் 11ஆம் தேதி படம் வெளியீடு காணும் என்றும் ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

 கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி 'ரைட்டர்', 'ஆனந்தம் விளையாடும் வீடு', 'தீர்ப்புகள் விற்கப்படும்', 'தள்ளிப்போகாதே', 'ராக்கி' ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. 'பிளாக்மணி' என்ற படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

 நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறாராம். மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக துபாய்க்கு குடிபெயர்ந்துள் ளார்் மாதவன். மிகச்சிறந்த நீச்சல் வீரராக உருவாகி வரும் வேதாந்த், அண்மையில் நடைபெற்ற இந்திய தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் பங்கேற்று ஏழு பதக்கங்களை அள்ளி உள்ளார். இதையடுத்து 2026ஆம் ஆண்டு அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். அதற்குப் பயிற்சி பெற பெரிய

நீச்சல் குளங்கள் தேவை. ஆனால் மும்பையில் ஒருசில நீச்சல் குளங்கள்தான் பெரிதாக உள்ளன. அவையும் இப்போது மூடப்பட்டுள்ளன. அதனால் மகனுக்காக நானும் மனைவியும் துபாய் செல்ல முடிவெடுத்தோம்," என்கிறார் மாதவன். மகனை திரைப்பட நடிகராக்குவதில் தமக்கு விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே அடுத்து இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிக்கிறார் மாதவன்.