‘ரசிகர்கள் விரும்புவதைச் செய்கிறேன்’

"தமிழ் ரசி­கர்­கள் இன்­னும் பழைய சந்­தா­னத்தை மறக்­க­வில்லை. நான் கதா­நா­ய­க­னாக மாறி­விட்­டா­லும், எப்போதும் எனது பழைய நகைச்­சு­வை­யும் வேண்­டும் என்­பதே ரசி­கர்­க­ளின் விருப்­ப­மாக உள்­ளது," என்­கி­றார் சந்தா­னம்.

'சபா­பதி' படத்­துக்­குப் பிறகு மூன்று படங்­களில் கவ­னம் செலுத்தி வரு­வ­தா­கச் சொல்­ப­வர், ரசி­கர்­களின் விருப்­பத்­துக்­கேற்ப கதை­களைத் தேர்வு செய்­யப் போவ­தா­கக் கூறு­கிறார்.

'மேயாத மான்', 'ஆடை' ஆகிய படங்­களைத் தந்த ரத்­ன­கு­மார் இயக்­கத்­தில் ஒரு படம், தமது நகைச்­சு­வைக் குழு­வில் உள்ள ஆனந்த் இயக்­கும் படம், தெலுங்­கில் வெற்றி பெற்ற 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனி­வாச ஆத்­ரேயா'வின் மறு­ப­திப்­பான 'ஏஜெண்ட் கண்ணா­யி­ரம்' ஆகிய படங்­களில் நடித்து வரு­கி­றார் சந்­தா­னம். இப்­போது புது­வை­யில் நடை­பெ­றும் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­றுள்­ளார்.

"நகைச்­சுவை கதா­பாத்­தி­ரங்­க­ளைக் கைவிட்டு கதா­நா­ய­க­னாக மாறிய பின்­னர் சில பிரச்­சி­னை­கள் நீடித்து வரு­கிறது என்­பதை ஒப்­புக்­கொள்­கி­றேன். நான் 'சக்­கப் போடு போடு­ராஜா' படம் மூலம் கதா­நா­ய­கன் ஆ­னேன். அதில் நான் யாரை­யும் கிண்­டல் செய்­ய­மாட்­டேன். தவிர மற்ற கதா­பாத்­தி­ரங்­க­ளி­டம் மரி­யா­தை­யா­கப் பேசு­வேன், அறி­வு­ரை­கள் சொல்­வேன்.

"ஆனால் அப்­படி அமைக்­கப்­பட்ட பாத்­தி­ரத்தை மக்­கள் ரசிக்­க­வில்லை. அந்த சந்­தா­னம் வெறும் கதா­நா­ய­கன்­தான். பார்க்க அழ­காக இருப்­பான், 'சிக்ஸ்­பேக்' வைத்­தி­ருக்­கும் இளை­ஞன் அவன்.

"தமிழ் ரசி­கர்­கள் அல்­லா­மல் பிற­மொழி ரசி­கர்­கள் அதைப் பார்த்­தால் கதா­நா­ய­கன் சந்­தா­னம் மட்­டுமே கண்­க­ளுக்­குத் தெரிந்­தி­ருப்­பேன். அதிக குறை­கள் கூறி­யி­ருக்க மாட்­டார்­கள்.

"ஆனால் நம் மக்­கள் அந்த சந்­தா­னம் வேண்­டாம் என்­ற­னர். நகைச்­சுவை வேண்டும், அனைத்­துக்­கும் பதி­லடி தரும் சந்­தா­னத்­தைப் பார்க்க வேண்­டும் என்­றும் கூறி­னர். அத­னால்­தான் ரசி­கர்­கள் என்ன எதிர்­பார்க்­கி­றார்­கள் என்­பதை அறிந்­து­கொண்டு அதை­யும் கொடுத்து வரு­கிறேன்.

"அந்த வகை­யில் சில ஏற்ற இறக்­கங்­கள் இருப்­பதை நானும் உணர்ந்­துள்­ளேன். எத்­த­கைய கதா­பாத்­தி­ர­மாக இருந்­தா­லும் அதில் சந்­தா­னத்­தின் தனி­ முத்­திரை இருக்க வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக உள்­ளேன். கார­ணம், சந்­தா­னம் என்ற கதா­பாத்­தி­ரம் என்­றும் மாறாது," என்­கி­றார் சந்­தா­னம்.

சந்தானம்

, :   

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!