ராஜலட்சுமி: இது எதிர்பாராத வரவேற்பு

ராஜலட்சுமி: இது எதிர்பாராத வரவேற்பு

2 mins read
feb299b9-4a36-4736-b051-f8799a3b900b
செந்தில்கணேஷ், ராஜலட்சுமி தம்பதியர். -

'புஷ்பா' படத்­தில் இடம்­பெற்­றுள்ள 'சாமி சாமி' (வாய்யா சாமி) என்­கிற பாடல் ஆந்­தி­ரா­வின் பட்­டி­தொட்டி எங்­கும் ஒலித்­துக் கொண்­டி­ருக்­கிறது. இதே பாடலை அப்­ப­டத்­தின் தமிழ்ப் பதிப்­பில் பாடி­யுள்­ளார் ராஜ­லட்சுமி செந்­தில்­க­ணேஷ்.

'சூப்­பர் சிங்­கர்' நிகழ்ச்­சி­யின் மூலம் உல­கெங்­கும் உள்ள தமி­ழர்­கள் மன­தில் இடம்­பி­டித்­துள்­ள­னர் ராஜ­லட்­சுமி, செந்­தில்­கணேஷ் தம்­ப­தி­யர்.

இந்­நி­லை­யில், வம்சி இயக்­கத்­தில் விஜய் நடிக்­கும் படத்­துக்கு தமன் இசை­ய­மைத்­துள்­ள­தா­க­வும் அதில் இடம்­பெ­றும் அதி­ர­டிப் பாடல் ஒன்றை செந்தில் க­ணேஷ் தம்­ப­தி­யர் பாடு­வ­தாகவும் தக­வல் வெளி­யா­னது.

இதை­ய­டுத்து விஜய் ரசி­கர்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் இரு­வ­ருக்­கும் வாழ்த்­து­க­ளைக் குவித்து வரு­கின்­ற­னர். ஆனால் செந்­தில் கணேஷ் தம்­ப­தி­யர் இதை மறுத்­துள்­ள­னர்.

'புஷ்பா' படப்­பா­ட­லைப் பாடும்­போது பட­ப­டப்­பாக உணர்ந்­த­தா­கச் சொல்­கி­றார் ராஜ­லட்­சுமி.

"தெலுங்­கில் அந்­தப் பாடலைக் கேட்­ட­போது, ஒரு­வித வேகம், வலிமை, புத்­து­ணர்ச்சி என எல்­லாம் இருந்­தன. அதற்கு இணை­யாக தமிழ்ப் பாட­லும் அமைய வேண்­டும் என விரும்பி­னேன்.

"இந்த எண்ணத்துடன்தான் பாடி முடித்தேன். ஆனால் இந்த அளவுக்கு பாடல் ரசிகர்களைச் சென்றடையும் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

"என் தாயார் திரையரங்குக்குச் சென்று படம் பார்க்கும் ஆவல் இல்லாதவர். ஆனால் 'சாமி சாமி' பாடலைக் கேட்ட பிறகு 'புஷ்பா' படம் பார்க்க திரையரங்குக்கு அழைத்துப் போகச் சொன்னார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இவ்வாறு விருப்பம் தெரிவித்தது மிக மகிழ்ச்சியான தருணம்," என்கிறார் ராஜலட்சுமி.

விஜய் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதா? என்று கேட்ட அடுத்த நொடியே, அது தவறான தகவல் என்கிறார் செந்தில்கணேஷ்.

எனினும் அஜித் படத்தில் பாடிவிட்டதால் விஜய் படத்திலும் பாட ஆவலுடன் காத்திருப்பதாக இருவரும் சொல்கின்றனர்.