சிம்புவுக்கு ஜோடியாகும் சங்கர் மகள்

சிம்புவுக்கு ஜோடியாகும் சங்கர் மகள்

1 mins read
439af618-49b5-4ec4-9016-1252ca16a5d0
-

சிம்­பு­வும் இயக்­கு­நர் சங்­க­ரின் மகள் அதிதியும் ஜோடி சேர இருப்­ப­தாக ஒரு தக­வல் வெளியாகி உள்­ளது.

'மாநாடு' படத்­தின் வெற்­றியை அடுத்து, சிம்­புவை நோக்கி தயா­ரிப்­பா­ளர்கள் படை­யெ­டுத்து வரு­கின்­ற­னர். அவரோ, தனக்­கேற்ற கதை, நல்ல இயக்­கு­நர், அனு­ப­வ­முள்ள தயா­ரிப்பு நிறு­வ­னம் உள்­ளிட்ட விஷ­யங்­களை ஆராய்ந்த பிறகே வாய்ப்­பு­களை ஏற்­றுக்­கொள்­கி­றார்.

இந்­நி­லை­யில் அவர் அடுத்து கோகுல் இயக்­கத்­தில் நடிக்க உள்ள 'கொரோனா குமார்' படத்­தின் படப்­பி­டிப்பைத் தொடங்க உள்­ள­னர். அதில் நாய­கி­யாக நடிக்­கக்­கேட்டு அதி­தியை அணுகி உள்­ள­னர். அவர் தற்­போது முத்­தையா இயக்­கத்­தில் கார்த்தி ஜோடி­யாக 'விரு­மன்' படத்­தில் நடித்து வரு­கி­றார்.

சிம்பு பட வாய்ப்பை அவர் ஏற்­றுக்­கொண்­ட­தா­க­வும் மிக விரை­வில் அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.