பிரமிக்க வைத்த அல்லு: பாராட்டிய சமந்தா

பிரமிக்க வைத்த அல்லு: பாராட்டிய சமந்தா

1 mins read
e209af8d-de52-4637-8587-c5e07c3f131b
தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் அல்லு அர்ஜுன், சமந்தா. -

'புஷ்பா' படத்­தில் அதன் நாய­கன் அல்லு அர்­ஜு­னின் நடிப்பு தம்மை பிர­மிக்க வைத்­த­தா­கப் பாராட்டி உள்­ளார் சமந்தா.

அந்­தப் படத்­தில் ஒற்­றைப் பாட­லுக்கு சமந்தா போட்ட குத்­தாட்டத்­துக்­குப் பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ளது. அதே­ச­ம­யம் அப்­பா­ட­லில் கவர்ச்­சி­யாக நடித்­துள்­ள­தாக கடும் விமர்­சனங்­களும் எழுந்­துள்­ளன.

இந்­நி­லை­யில், அல்லு அர்­ஜுனை பாராட்­டு­வ­தற்­காக மட்­டுமே டுவிட்­டரில் ஒரு பதிவை வெளி­யிட்­டுள்­ளார் சமந்தா.

"ஒவ்­வொரு நொடி­யும் உங்­க­ளைக் கவர்ந்­தி­ழுக்­கும் ஒரு நடிப்பு. ஒரு நடி­கர் எப்­போ­துமே சிறப்­பா­கச் செயல்­ப­டும்­போது அவரை விட்டு விலகி நிற்­பது இய­லாத காரி­யம். 'புஷ்பா' படத்­தில் அல்லு அர்­ஜுன் எனக்கு அப்­ப­டித்­தான் தெரிந்­தார்.

"பேச்சு, நடை, உடல்­மொழி என உண்­மை­யா­கவே பிர­மிப்பை ஏற் படுத்து­கி­றார்," என்று சமந்தா தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்கு நன்றி தெரி­வித்­துள்ள அல்லு அர்­ஜுன், "மனப்­பூர்­வ­மான பாராட்­டு­க­ளுக்கு நன்றி... மன­தைத் தொட்­டு­விட்­டீர்­கள்," என்று தெரி­வித்­துள்­ளார்.

இந்தப் படத்துக்காக சமந்தா ஆடிய கவர்ச்சி நடனத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதைப் பொருட்படுத்தாமல், மேலும் ஒரு படத்தில் இதேபோன்ற குத்துப் பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டுள்ளாராம் சமந்தா.