இயக்குநருக்கு இலக்கு நிர்ணயித்த விஜய்

இயக்குநருக்கு இலக்கு நிர்ணயித்த விஜய்

3 mins read
fb593a7c-e960-41e2-9747-b21f731ede71
-

விஜய் நடிக்­கும் அடுத்த படத்தை தெலுங்கு இயக்­கு­நர் வம்சி இயக்­கப்­போ­வது தெரிந்த செய்­தி­தான். அந்­தப் படத்­துக்­கான பாடல்­க­ளுக்கு மெட்­ட­மைக்­கும் பணி தொடங்­கி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், வம்சி இயக்­கும் படம், தனது முந்­தைய படங்­க­ளின் வசூ­லை­விட அதி­க­மாக இருக்க வேண்­டும் என்று இலக்கு நிர்­ண­யித்­துள்­ளா­ராம் விஜய். மேலும் ரசி­கர்­களை அனைத்து வகை­யி­லும் திருப்­திப்­ப­டுத்­தும் வகை­யில் படம் இருக்க வேண்­டும் என்­றும் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே குடும்­பத்­து­டன் லண்டன் செல்­லும் விஜய், அங்கு குறைந்­த­பட்­சம் ஒரு­மாத காலம் தங்­கி­யி­ருக்­கப் போவ­தா­கத் தகவல்.

கிறிஸ்­மஸ், புத்­தாண்டு கொண்­டாட்­டங்­களை முடித்­துக் கொண்டு, பொங்­க­லுக்­குப் பிறகு அவர் நாடு திரும்பு­வார் என்­கி­றார்­கள் விவ­ரம் அறிந்­த­வர்­கள்.

சென்னை வந்­த­டைந்த கையோடு வம்சி இயக்­கும் படத்­துக்­கான படப்­பி­டிப்­பைத் தொடங்க திட்­ட­மிட்­டுள்­ள­னர். முதற்­கட்­ட­மாக ஒரு பாடலை மட்­டும் சென்­னை­யில் பட­மாக்­கி­விட்டு, அடுத்­தக்­கட்ட படப்­பி­டிப்பை ஹைதரா­பாத்­தில் நடத்­து­வ­தாக திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தப் புதிய படத்­துக்கு தமன் இசை­ய­மைக்­கப் போகி­றார். தெலுங்­குத் திரை­யு­ல­கில் முன்­னணி இசை­ய­மைப்­பா­ள­ராகிவிட்­ட­தால், அங்கு வேலை பார்ப்­பது அவ­ருக்கு கடும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­து­வதாக உள்­ள­தாம்.

இதை அறிந்த விஜய் படத்­தின் தயா­ரிப்­புத் தரப்பு, தமனை சென்­னைக்கு அழைத்து வந்­துள்­ளது. பெரிய நட்­சத்­திர தங்கு விடுதி ஒன்­றில், ஆகக் கடை­சி­யான மாடி­யில், தம­னுக்­காக தனி இசை அரங்­கமே அமைத்­துக் கொடுத்­துள்­ள­ன­ராம். அங்கு தங்­கி­யுள்ள தமன், பாடல்­க­ளுக்கு மெட்­ட­மைத்து வரு­கி­றார். ஒன்­றி­ரண்டு நாள்­கள் மெட்­ட­மைப்­பின்­போது விஜய்­யும் நேரில் வந்து அதில் பங்­கேற்­றுள்­ளார். அவ­ரது வருகை தமனை வெகு­வாக ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­ய­தாம்.

தனது இசை­யில் விஜய் பாட வேண்டும் என்று தமன் தன் விருப்­பத்­தைச் சொல்ல, "ஆகட்­டும் பார்க்­க­லாம்," என்­பதே விஜய்­யின் தற்­போ­தைய பதி­லாக இருந்­துள்­ளது.

"இப்­போ­தெல்­லாம் முன்­னணி நாய­கர்­கள் நடிக்­கும் படங்­கள் நூறு கோடி ரூபாய் வசூல் கண்­டால்­தான் தயா­ரிப்­பா­ளர்­கள் ஓரளவு லாபம் பார்க்க முடி­கிறது. அத­னால் ஒவ்­வொரு பட­மும் பிரம்­மாண்­ட­மாக இருக்க வேண்­டும் என்­பதை தயா­ரிப்­பா­ளர், இயக்கு­நர் மட்­டு­மல்­லா­மல் முன்­னணி நாய­கர்­களும் உணர்ந்­துள்­ள­னர். விஜய்க்­கும் அந்த கவ­லை­யும் அக்­க­றை­யும் உள்­ளது.

"முன்­பெல்­லாம் பாட­லுக்­கான மெட்டு அமைக்­கப்­பட்­ட­தும், அதைக் கேட்டு கதா­நா­ய­கர்­கள் கருத்து தெரி­விப்­பார்­கள். ஆனால் இப்­போது மெட்­ட­மைக்­கும்­போதே இசை­ய­மைப்­பா­ள­ரு­டன் அமர்ந்து அதைக் கேட்­கி­றார்­கள். மேலும் பாடல் வரி­களில் கூட கவ­னம் செலுத்­து­கி­றார்­கள்," என்­கின்­ற­னர் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்­ளி­கள்.

இதற்­கி­டையே, 'பீஸ்ட்' படத்­தில் இயக்­கு­நர் செல்­வ­ரா­க­வன் மிகச் சிறப்­பாக நடித்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­படு­கிறது. கதைப்­படி அவர் மோச­மான அர­சி­யல்­வா­தி­யாக நடித்­திருப்­ப­தாக முன்பு தக­வல் வெளி­யா­னது.

ஆனால் அது தவ­றான தக­வல் என்­றும் அவர் இணைய ஊடு­ரு­வி­யாக (ஹேக்­கர்) நடித்­துள்­ள­தா­க­வும் மற்­றொரு தக வல் தெரி­விக்­கிறது.

செல்­வ­ரா­க­வன் நடித்த சில காட்­சி­களை மட்­டும் விஜய்க்கு திரை­யிட்­டுக் காட்டினா­ராம் 'பீஸ்ட்' இயக்­கு­நர் நெல்­சன் திலீப்­கு­மார்.

அவற்­றைப் பார்த்து அசந்­து­போன விஜய், "உட­ன­டி­யாக செல்­வ­ரா­கவனுக்கு கூடு­தல் முக்­கி­யத்­து­வம் தரும் வகை­யில் மேலும் சில காட்­சி­களை இணைக்­கு­மாறு கேட்டுக் கொண்­டா­ராம்.

அத­னால்­தான் விஜய் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்ட பிற­கும் 'பீஸ்ட்' படப்­பி­டிப்பு மேலும் ஒரு வாரம் நீடித்­தது. அப்­போது செல்­வ­ரா­க­வன் சம்­பந்­தப்­பட்ட காட்­சி­களை மட்­டுமே பட­மாக்கி உள்­ள­னர்.

இயக்­கு­நர் மூலம் இதை அறிந்த செல்­வ­ரா­க­வன் விஜய்யை தொடர்­பு­கொண்டு நன்றி தெரி­வித்­துள்­ளார். மேலும், படப்பிடிப்பிலும் உற்சாக மாக பங்கேற்றுள்ளார்.

, :   