பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது தாம் இயக்கி வரும் 'நட்சத்திரம் நகர்கிறது' படத் தின் இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்கி உள்ளார் ரஞ்சித்.
இதில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நாயகனாகவும் 'சார்பட்டா' துஷாரா நாயகியாகவும் நடித்துள்ளார். கலையரசன் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.
நேற்று முன்தினம் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததையடுத்து தொழில் நுட்பப் பணிகள் துவங்கியுள்ளன.
இது முழுநீள காதல் படம் என்பதால் காதலர் தினத்தன்று வெளியாகக்கூடும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

