மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படம் ஐநூறு கோடி ரூபாய் செலவில் உருவாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர்.
துபாய், லண்டன் என இரு இடங்களில் நடத்த விரும்புகிறாராம் மணிரத்னம். இதற்கு படத்தின் தயாரிப்புத் தரப்பான லைக்கா நிறுவ னம் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகத் தகவல்.
இந்நிகழ்வுக்கு இந்திய திரையுலகப் பிர பலங்கள் மட்டுமல்லாமல், உலகச் சினிமாவின் முன்னணி கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக் கப்பட இருப்பதாகத் தகவல். இரு பாகங்களாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.

