அமெரிக்க நடிகரான ஜேம்ஸ் ஃபிரேங்கோ, தாம் முன்பு நடத்தி வந்த நடிப்புப் பயிற்சி பள்ளியில் சேர்ந்த மாணவர்களுடன் தாம் படுத்ததை ஒப்புக்கொண்டார்.
பாலியல் உறவு கொள்வதில் தாம் அடிமையானதாகச் சொன்ன இவர், அண்மைய ஆண்டுகளாக தம்முடைய நடத்தையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகச் சொன்னார்.
மாணவர்களுக்கு நடிக்கச் சொல்லித் தந்தபோது, அவர்களுடன் தாம் படுத்ததாகவும் அது தவறு என்றும் ஃபிரேங்கோ, 43, கூறினார்.
பெண்களுடன் பாலியல் உறவு கொள்வதற்காக அவர்களைத் தமது பள்ளியில் சேர்க்கவில்லை என்பதையும் இவர் சொன்னார்.
இளம் வயதில் தமக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாலியல் உறவுக்கும் தாம் அடிமையானதாக ஃபிரேங்கோ குறிப்பிட்டார்.
2011ல் சிற்நத நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

