'பீஸ்ட்' படத்தின் சண்டைக் காட்சி எனக் குறிப்பிட்டு வெளியான காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதனால் அப்படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தக் காணொளியில் ராணுவ உடை அணிந்த ஒருவர் காணப்படுகிறார்.
இதையடுத்து, 'பீஸ்ட்' படம் ராணுவம் சம்பந்தப்பட்ட கதையுடன் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அஜித் நடிப்பில் அடுத்து வெளியாகும் 'வலிமை' படத்தின் 'தீம் மியூசிக்' வெளியிடப்பட்டுள்ளது. இதுவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

