'நிதானத்துக்கு வந்துள்ளேன்'

'நிதானத்துக்கு வந்துள்ளேன்'

3 mins read
b77efdb4-628a-4d9a-9726-0b05e47f0c2f
-

'மாநாடு' படம் பார்த்த ரஜினி, தொலை­பேசி வழி தொடர்­பு­கொண்டு சிம்­பு­வி­டம் பேசி­யுள்­ளார்.

அப்­போது, படம் சிறப்­பாக இருப்­ப­தா­க­வும் தனது நடிப்பு அபா­ரம் என்­றும் ரஜினி பாராட்­டி­யதை வாழ்­நாளில் மறக்க இய­லாது என்­கி­றார் சிம்பு.

திரும்­பிய திசை­யெல்­லாம், எப்­போது திரு­ம­ணம் என்று கேட்­கி­றார்­க­ளாம். 37 வய­தில் தாம் அனைத்து வித­மான அனு­ப­வங்­க­ளை­யும் கடந்து வந்­துள்­ள­தா­கக் குறிப்­பி­டு­பவர், மன­துக்­குப் பிடித்த பெண் கிடைத்­தால் உடனே திரு­ம­ணம்­தான் என்­கி­றார்.

"திடீ­ரென்று ஒரு நாள் என் உத­வி­யா­ளர் ரஜினி சார் அழைத்­துள்­ளார் என்று கைபே­சியை நீட்­டி­னார். எடுத்­துப் பேசி­னால், உண்­மை­யா­கவே அவர்­தான் எதிர்­மு­னை­யில் இருந்­தார்.

"இப்போதுதான் 'மாநாடு' படம் பார்த்­தேன் சிம்பு. நல்ல வேகம் காட்­டி­யி­ருக்­கி­றீர்­கள். தோற்­றத்­தி­லும் அறவே மாறி­விட்­டீர்­கள். உங்­கள் அனு­ப­வ­மும் திரை­யில் பேசு­கிறது. இந்த வெற்­றியை விட்­டு­விடா­மல் இறுக்­க­மா­கப் பிடித்­துக்­கொள்­ளுங்­கள். உங்­கள் நடிப்பு அமர்க்­க­ள­மாக இருந்­தது. மிக்க மகிழ்ச்சி என்­றார்.

"அவ­ரது வார்த்­தை­களில் இருந்த உண்மை என் மேல் அவர் கொண்­டி­ருக்­கும் அன்­பைக் காட்­டி­யது. ஒவ்­வொரு வார்த்­தை­யி­லும் கனிவு இருந்­தது," என்­கி­றார் சிம்பு.

'மாநாடு' படத்­தின் தலைப்­பில் இவ­ரது பெய­ருக்கு முன்­னால், 'ஆத்­மன்' என்ற வார்த்தை இடம்­பெற்­றுள்­ளது. இது என்ன புது பட்­டப்­பெ­யர் என்று கேட்­டால், அப்படி எது­வும் இல்லை என்­கி­றார்.

"ஆத்­மன்' என்­பது ஒரு­வி­த­மான வாழ்க்­கை­முறை. எப்­படி வாழ வேண்­டும் என்று சொல்­லித்­த­ரும். தன்­னைத் தானே ஒழுங்­கு­ப­டுத்­திக் கொள்­வ­து­தான் இதற்கு அர்த்­தம்.

"நல்ல நேர்­மறை சிந்­த­னை­யைத் தரும் வார்த்­தை­யாக உள்­ளது என்று வெங்­கட் பிரபு சொன்­னார். இதைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம் என்று அவர் கூறி­ய­போது நானும் மறுப்பு தெரி­விக்­க­வில்லை.

"முன்பு என் பெய­ருக்கு முன்­னால் 'லிட்­டில் சூப்­பர் ஸ்டார்' என்று போடு­வார்­கள். நானும் அதற்கு சம்­மதித்­தேன். பிறகு நானே அது வேண்­டாம் என்­றும் முடி­வெ­டுத்­தேன். அத­னால் எனக்கு பட்­டப்­பெ­யர் மீதெல்­லாம் ஆசை கிடை­யாது," என்­கி­றார் சிம்பு.

37 வய­தில் தன் வாழ்க்­கை­யில் பல விஷ­யங்­கள் நடந்து முடிந்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், இனி தமது பய­ணம் நல்­ல­வற்றை நோக்கி மட்­டுமே இருக்­கும் என்­கி­றார்.

இளம் வய­தி­லேயே காதல், புகழ், பணம், பின்­னர் காதல் முறிவு, தோல்வி என்று அனைத்­தை­யும் பார்த்து­விட்­ட­தா­கச் சொல்­ப­வர், தற்­போது ஒரு­வித நிதா­னத்­துக்கு வந்­தி­ருப்­ப­தா­க­வும், கனி­வான மன­நி­லையை அடைந்­தி­ருப்­ப­தா­க­வும் குறிப்­பி­டு­கி­றார்.

"25 வய­துக்­குள் எல்­லாம் நடந்து முடிந்­து­விட்­டது. யாருக்­கும் இந்த வய­துக்­குள் இவ்­வ­ளவு ஏற்ற இறக்­கங்­கள் ஏற்­ப­டுமா என்­பது தெரி­ய­வில்லை. ஆனால், எனக்கு இன்­னும் காலம் இருக்­கிறது. தவ­று­க­ளைத் திருத்­திக்­கொள்­ள­லாம்.

"நல்­லது, கெட்­டது என இரண்­டை­யும் பார்த்­து­விட்­ட­தால், எனது தேடல்­கள் முடி­வுக்கு வந்­தி­ருக்­கிறது. இனி எல்­லாமே சரி­யாக இருக்­கும். என்­னைப் பற்­றிய குறை கூறல்­கள் இருக்­காது," என்­கி­றார் சிம்பு.

திடீ­ரென ஆன்­மி­கத்­தில் நாட்­டம் காட்­டி­யது குறித்து கேட்­டால், இப்­போ­து­தான் அது குறித்து ஒரு புரி­தல் ஏற்­பட்­டுள்­ள­தா­கச் சொல்­கி­றார். வேடிக்­கை­யா­கத்­தான் இமய மலைக்­குச் சென்று வந்­தா­ராம். ஆனால், அங்­கு­தான் உண்­மை­யான அமை­தியை உணர முடிந்­த­தாம்.

"நாம் எதற்­காக இங்கு வந்­தோம் என்ற ஒற்­றைக் கேள்­வி­தான் மன­தில் நின்­றது. நான் சிம்­பு­தானா என்று கேட்­கத் தோன்­றி­யது. திடீ­ரென ஒரு புள்­ளி­யாக மாறி, அடை­யா­ளமே இல்­லா­மல் நின்­றேன். அப்­போ­து­கூட மன­தில் பிர­மிப்பு மட்­டும்­தான் இருந்­தது. இமய மலைப் பய­ணம் பல­வற்­றைப் புரிய வைத்­தது.

"உண்­மை­யில் எல்­லாமே என்­னி­டம் இருந்­தது; ஆனால் இல்லை. காத­லித்­தேன், வெளியே வந்­தேன். மெல்ல ஆன்­மி­கத்­துக்­குள் நுழைந்­தேன்.

"பைபிள், குர்ஆன், கீதை என்று படிக்­கத் துவங்­கி­விட்­டேன். ஒரு சம­யம் எட்டு மணி நேரம்­கூட தொடர்ந்து தியா­னத்­தில் இருந்­தி­ருக்­கி­றேன். அதைக் கண்டு என் அம்மா பயந்து­விட்­டார். என் கட­வு­ளுக்கு முகமே கிடை­யாது. நண்­பர்­க­ளி­டம் தோளில் கைபோட்­டுப் பேசு­வ­து­போல் என் சாமி­யி­டம் பேசு­வேன்," என்­கி­றார் சிம்பு.

நெருக்­க­மா­ன­வர்­க­ளும்­கூட, 'திரு­ம­ணமே வேண்­டாம் என்று இருக்­கப் போகி­றீர்­களா?' என்று கேட்­கி­றார்­க­ளாம். திரை­யுலக நண்­பர்­களோ, 'இன்­னொரு சல்­மான் கான்' என்று விளை­யாட்­டா­கச் சொல்­கி­றார்­க­ளாம்.

அவர்­க­ளுக்கு சிம்­பு­வின் பதில், 'நிச்­ச­யம் திரு­ம­ணம் செய்­வேன்' என்­ப­து­தான்.

"திரு­ம­ணம் செய்­யும் பெண்ணை எனக்­குப் பிடித்­தி­ருக்க வேண்­டும். அதே­போல் அவ­ருக்­கும் என்­னைப் பிடிக்கவேண்­டும். என் அப்பா, அம்­மா­வைப் போல் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் விட்­டுக்­கொ­டுத்து வாழவேண்­டும் என்ற ஆசை. இப்­ப­டிப்­பட்ட ஒரு பெண்­ணைத்­தான் தேடிக் கொண்­டி­ருக்­கி­றேன். எனக்­கா­ன­வர் எங்கே போய்­வி­டப் போகி­றார். விரை­வில் கண்­ணில் படு­வார். பிறகு திரு­ம­ணம்­தான்," என்­கி­றார் சிம்பு.

அடுத்து, 'பத்து தல', 'கொரோனா குமார்', 'வெந்து தணிந்­தது காடு' என்று மூன்று படங்­களில் நடிக்க ஒப்­புக்­கொண்­டுள்­ளார் சிம்பு. அவற்­றுள் கௌதம் மேனன் இயக்­கும் 'வெந்து தணிந்தது காடு' முத­லில் வெளி­யா­­கிறது.