திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
ded8acd6-eeab-41a1-a758-f9a2aea63138
-
multi-img1 of 3

 தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக வெளியான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என அபர்ணா பாலமுரளி கேட்டுக் கொண்டுள்ளார். 'சூரரைப் போற்று' படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடித்துள்ள அபர்ணாவுக்கு, அண்மையில் கடும் காய்ச்சல் ஏற்பட்டதாகவும் அதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், அவருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறப்பட்டதால் ஏராளமானோர் அவரைத் தொடர்பு கொண்டனராம். அவர் நலமடைய பிரார்த்தனை செய்வதாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இதையடுத்து, தனது உடல்நிலை குறித்து வெளியான தகவல் உண்மையல்ல என்று அபர்ணா விளக்கம் அளித்துள்ளார்.

 தெலுங்கு இயக்குநர் வெங்கி இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இப்படத்துக்கு 'வாத்தி' எனத் தலைப்பு வைத்துள்ளனர். தெலுங்கில் 'சார்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தன்னுடைய முதல் நேரடித் தெலுங்குப் படம் என தனுஷ் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அவரது ஜோடியாக சம்யுக்தா மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். மலையாள நடிகரான இவர், தமிழில் ஏற்கெனவே 'களரி', 'ஜூலை காற்றில்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

 விவாகரத்து மூலம் ஐம்பது கோடி ரூபாயை தனது குடும்பத்தாரிடம் இருந்து பெற்றவர் எனத் தன்னைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா.

அந்த இணையவாசி, "விவகாரத்து பெற்ற இரண்டாம் தரமானவர் ஒரு நல்ல மனிதரிடம் இருந்து ஐம்பது கோடி ரூபாயை வரி இல்லாமல் பெற்றவர்," என்று சமந்தாவை மறைமுகமாகச் சாடி இருந்தார்.

இதற்கு பதிலளித்த சமந்தா, "கடவுள் உங்கள் ஆன்மாவை ஆசீர்வதிக்கட்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

இது சரியான பதிலடி என்று பலர் சமந்தாவுக்கு ஆதரவு தெரிவிக்க, அவரை விமர்சித்துப் பதிவிட்டவர், தனது பதிவை நீக்கிவிட்டார்.

கணவர் குடும்பத்தார் ஜீவனாம்சமாக பெரிய தொகையை அளிக்க முன்வந்தபோது அதை சமந்தா ஏற்க மறுத்துவிட்டதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.