'தொடக்கமும் முடிவும் இல்லா பண்டிகை' என கிறிஸ்துமஸ் பற்றி குறிப்பிடும் அமலா, தன் அம்மாவுடன்தான் இப்பண்டிகையைக் கொண்டாடுவார்.
அமலாவின் வாழ்வில் கிறிஸ்துமஸ் பண்டிகை மிக முக்கியமானது. இயக்குநர் ஏ.எல்.விஜய் மீது அவருக்குக் காதல் வரக் காரணமே இப்பண்டிகைதான்.
ஒரு சமயம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக அமலா இத்தாலி சென்றிருந்தார். அங்கே உலக கிறிஸ்தவர்களின் தலைநகரம் எனப்படும் வாடிகன் நகரில் உள்ள தேவாலயத்தின் மாடத்தில் இருந்து பொதுமக்களுக்கு போப் ஆண்டவர் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அமலாவும் ஆசி பெற்றுவிட்டு, ஓர் உயரமான இடத்திலிருந்து கூட்டத்தை சுற்றிப் பார்த்தபோது, அங்கே அமலாவைப் பார்த்தபடி விஜய் நின்றிருந்தார். பிறகென்ன, நெகிழ்ந்துபோனார் அமலா.
இந்த ஜோடி விரைவிலேயே திருமணம் செய்து, மிக விரைவிலேயே பிரிந்தது சோகம்தான். எனினும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை அவர் தவறவிடுவதே இல்லை.

