திரிஷா கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்ட கேரள மாநிலம் பாலக்காட்டு பிராமணப் பெண். ஆனாலும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும்.
சென்னையில் இருந்தால் தன் அம்மா உமாவுடன் சேர்ந்து பண்டிகையை வீட்டிலேயே கிறிஸ்து மரம் வைத்து, 'ஸ்டார்'களை தொங்கவிட்டு கொண்டாடுவார்.
பொதுவாகவே தன் செல்லப் பிராணிகளான நாய்களை நன்கு உபசரிப்பார் திரிஷா. பண்டிகை நாளில் இன்னும் கூடுதலாக கவனிப்பார். ஆனால், பெரும்பாலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை அமெரிக்காவில் கொண்டாடுவதில்தான் அவருக்கு விருப்பம் அதிகம்.
வெளிநாடுகளில் கிறிஸ்துமஸுக்கு முன்கூட்டியே தொடங்கி, புத்தாண்டு முதல் வாரம் வரை நீண்ட விடுமுறை இருக்கும்.
அதனால் தன் அமெரிக்கத் தோழிகளைச் சந்தித்து, கிறிஸ்துமஸை கொண்டாடுவார். மியாமி கடற்கரையில் அவரது தோழிகளால் அமர்க்களப்படுவது கிறிஸ்துமஸ் வாடிக்கைகளில் ஒன்று. இந்த ஆண்டு எங்கே இருப்பார் என்பது தெரியவில்லை.
திரிஷா

