நட்சத்திரங்களின் கொண்டாட்டம்

நட்சத்திரங்களின் கொண்டாட்டம்

2 mins read
f1ac5b3f-02c0-4fcd-8fda-e636cf4f1518
-
multi-img1 of 2

, :   

நயன்தாரா

தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் சிலர் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப் பாகவும் சிலர் எளிமையாகவும் கொண்டாடுகிறார்கள். ரசிகர்களும் அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.

சில நட்­சத்­தி­ரங்­கள் கிறிஸ்­துவ மதத்­தைச் சேரா­த­வர்­க­ளாக இருந்­தா­லும் நண்­பர்­க­ளை­யும் உற­வி­னர்­க­ளை­யும் சந்­தித்து, விருந்­துண்டு மகிழ கிறிஸ்­து­மஸ் கொண்­டா­டு­கி­றார்­கள்.

இந்­தக் கொண்­டாட்­டங்­களில் பல்­வேறு சுவை­யான நிகழ்­வு­களும் நடந்­தி­ருக்­கின்­றன. அது­பற்றி இந்த தொகுப்­பில் பார்க்­க­லாம்.

உள்­நாட்­டி­லும் வெளி­நாட்­டி­லு­மாக பறந்து பறந்து கிறிஸ்­து­மஸ் பண்­டி­கை­யைக் கொண்­டா­டு­கி­றார் நயன்­தாரா.

எவ்­வ­ளவு பிரச்­சி­னை­கள் இருந்­தா­லும் கிறிஸ்­து­மஸ் பண்­டி­கையை மட்­டும் மகிழ்ச்­சி­யா­கக் கொண்­டாட நயன்­தாரா தவ­று­வ­தில்லை.

டயானா குரி­யன் என்­ப­து­தான் நயன்­தா­ரா­வின் பிறப்­புச் சான்­றி­த­ழில் இருந்த பெயர். நயன்­தாரா என்­பது சினி­மா­வுக்­காக வைக்­கப்­பட்­டது.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு அவர் இந்து மதத்­துக்கு மாறி­ய­தாக தக­வல் வெளி­யா­னது. அது இப்­போது முக்­கி­யம் அல்ல. அனைத்து மதங்­க­ளி­லும் உள்ள நல்ல விஷ­யங்­களை மதிப்­பார் நயன்­தாரா.

திரு­நெல்­வேலி நெல்­லை­யப்­பர் கோவி­லுக்­குச் செல்­வதை வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார்.

நெல்­லை­யப்­பரை வேண்­டிய பிற­கு­தான் சினி­மா­வில் 'ஐயா' பட கதா­நா­யகி வாய்ப்பு வந்­த­தாக அசைக்க முடி­யாத நம்­பிக்கை நய­னுக்கு உள்­ளது என்­கி­றார்­கள் விவ­ரம் அறிந்­த­வர்­கள்.

கேரள கலாசார பண்­டி­கை­யான ஓணம் பண்­டி­கையை கொச்சி நக­ரில் உள்ள தனது 'வொய்ட் வாட்­டர்' அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பில் தன் குடும்­பத்­தா­ரு­ட­னும் தன் காத­லர் விக்­னேஷ் சிவ­னின் குடும்­பத்­தா­ரு­ட­னும் இணைந்து கொண்­டா­டு­வார்.

ஆனால் அண்­மைய சில ஆண்­டு­க­ளாக கிறிஸ்­து­மஸ் பண்­டி­கை­யைக் கொண்­டாட, தன் காத­ல­ரு­டன் அமெ­ரிக்கா சென்­று­வி­டு­வதை வாடிக்­கை­யாக வைத்­தி­ருக்­கி­றார்.

அப்­படி கிறிஸ்­து­மஸ் சம­யம் அமெ­ரிக்கா போக முடி­யா­விட்­டா­லும்­கூட இன்­னொரு நாளில் அங்கு சென்று, காத­ல­ரு­டன் கொண்­டாடி மகிழ்­கி­றார்.

எதிர்­வ­ரும் புத்­தாண்­டில் நயன்­தா­ரா­வுக்கு திரு­ம­ணம் நடை­பெ­றும் என்­பது கிட்­டத்­தட்ட உறு­தி­யா­கி­விட்­டது.

எனவே, அடுத்த ஆண்­டுக்­குள் தாம் ஒப்­புக்­கொண்ட படங்­கள் அனைத்­தி­லும் நடித்து முடிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளா­ராம். அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் இன்னும் களைகட்டும்!

(இடமிருந்து) மனைவி சங்கீதாவுடன் விஜய்.

மனைவி ஷாலினியுடன் அஜித்.

நடிகர் விஜய்யின் அம்மா ஷோபாவின் அப்பா நீலகண்டன் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். ஷோபாவை எஸ்.ஏ.சந்திரசேகர் காதலித்தார். இந்த காதல் நிறைவேற சந்திரசேகர் மதம் மாறினார்.

அத­னால் பிறப்­பி­லேயே ஜோஸப் விஜய் என கிறிஸ்­து­வ­ரா­கப் பிறந்­தார் விஜய். இருப்­பி­னும் கிறிஸ்­தவ மத பண்­டி­கை­க­ளையோ, இந்­து­மத பண்­டி­கை­க­ளையோ வெளிப்­ப­டை­யாகக் கொண்­டா­டு­வ­தில்லை விஜய். தன் குடும்பத்தாருடன் எளிமையாகக் கொண்­டா­டு­வார்.

கிறிஸ்­தவ குடும்­பத்­தைச் சேர்ந்த ஷாலி­னியைக் காத­லித்து திரு­ம­ணம் செய்து கொண்­ட­வர் அஜித்.

அத­னால் அஜித் குடும்­ப­த்தார் வீட்­ட­ள­வில் கிறிஸ்­து­மஸ் பண்­டிகையைக் கொண்­டா­டு­வர்.