பிஞ்சுகளைக் காக்கும் சமந்தா

பிஞ்சுகளைக் காக்கும் சமந்தா

1 mins read
d3850225-aff6-40de-a305-0fcfd127f5d4
(மேல்படம்) கீர்த்தி சுரேஷ், ரெஜினா கஸாண்ட்ரா (வலது). -
multi-img1 of 3

சென்னை பல்­லா­வ­ரத்­தைச் சேர்ந்த ஆங்­கிலோ-இந்­திய வம்­சா­வ­ழிப் பெண்­ணான சமந்தா, தென்­னிந்­தி­யா­வின் இன்­றைய முக்­கிய நடிகை.

அதி­கம் சம்­பா­திக்­கும் இந்த அழகு நடிகை, தனது அறக்­கட்­டளை மூலம் ஏழைக் குழந்­தை­க­ளுக்கு இரு­தய நோய் அறுவை சிகிச்­சைக்­கான செல­வு­களை ஏற்று நிறைய குழந்­தை­க­ளைக் காப்­பாற்றி வரு­கி­றார்.

கிறிஸ்­து­மஸ் நாளில் தனது தோழமை வட்­டத்­து­டன் கோவா சென்று கொண்­டா­டு­வார். ஆத­ர­வற்ற குழந்­தை­க­ளுக்கு அன்­றைய தினம் விருந்­து­ண­வுக்­கும் ஏற்­பாடு செய்­வார்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக தன் காதல் கண­வ­ரு­டன் கொண்­டா­டிய சமந்தா, மீண்­டும் தோழி­க­ளு­டன் இணைந்­து­விட்­டார்.

தற்­போது கண­வ­ரைப் பிரிந்­து­விட்­டா­லும்­கூட , கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டத்தை இழந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தில் உறு­தி­யாக உள்­ளார்.

நடி­கை­கள் ரெஜினா, வர­லட்­சுமி, கீர்த்தி சுரேஷ் ஆகி­யோர் உட்­பட மேலும் சில நடி­கை­கள் கிறிஸ்து­மஸ், புத்­தாண்டு போன்ற தருணங்­க­ளைக் கொண்­டா­டத் தவறு­வ­தில்லை.

தங்­க­ளால் இயன்ற அளவு நலிந்­தோர்க்கு உத­வி­கள் செய்­கின்­ற­னர்.

மேலும், தங்­க­ளது கிறிஸ்­தவ தோழி­க­ளுக்­கும் திரை­யு­ல­கத்­தி­ன­ருக்­கும் வாழ்த்து தெரி­வித்து மகிழ்­கி­றார்­கள்.

கொரோனா நெருக்­கடி கார­ண­மாக கடந்த ஆண்டு கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டம் களைகட்டவில்லை. ஆனால், இந்த ஆண்டு புது படங்கள் வெளியாகிய நிலையில் திரை­யு­ல­கத்­தி­ன­ரி­டம் உற்­சா­கம் கூடி­யுள்­ளது.