இந்தி நடிகர் சல்மான் கான், தமக்குச் சொந்தமான பண்ணை வீட்டிற்குச் சென்றபோது அங்கு அவரைப் பாம்பு கடித்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் பன்வேல் என்ற இடத்தில் இவருக்கு பண்ணை வீடு ஒன்று உள்ளது. கொரோனா காலத்தில் அந்த வீட்டில் இருந்துகொண்டு விவசாய, தோட்டப் பணிகளை சல்மான் கான் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26) உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் சல்மான் கானை பாம்பு கடித்துவிட்டது. அதைத் தொடர்ந்து, உடனடியாக இவர் நவி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு இவருக்கு விஷ முறிவு மருந்தைக் கொடுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்து இன்று காலை மருத்துவமனையில் இருந்து சல்மான் கான் வீடு விரும்பிவிட்டார் என்றும் தற்போது இவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திங்கட்கிழமை (டிசம்பர் 27) சல்மான் கான் தம்முடைய 56வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் நிலையில், இந்தப் பாம்பு கடி சம்பவம் நிகழ்ந்தது.