தமிழ் சினிமா வரலாற்றில் முன்னணி நடிகையாக பல ஆண்டுகளாக முதல் இடத்தைத் தக்க வைத்து வருபவர் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா.
இவர் முதன் முதலாக தமிழில் நடித்த 'ஐயா' படத்தில் ஒரு சில லட்சங்களே சம்பளமாகப் பெற்றார். ஆனால் தற்பொழுது இவருடைய சம்பளம் ரூ.4 முதல் ரூ.5 கோடி.
இவர் நடிக்கும் படங்கள் தனி ஹீரோவிற்கு சமமாக, அதிக வசூலைப் பெற்றுத் தருவதால் தொடர்ந்து முன்னணி நாயகர்கள் இவருடன் இணைந்து நடிக்க விரும்புகின்றனர்.
அந்த வகையில் நயன்தாரா ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர் தற்பொழுது இந்தியில் கால் வைத்து இருக்கிறார்.
இவர் பயன்படுத்தும் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ, ஆடி Q7 கார்களின் விலை மட்டுமே 10 கோடி.
இவருக்குச் சொந்தமாக கேரளாவில் ஒரு வீடும் பண்ணை வீடு ஆகியவை உள்ளன.
அதேபோல் சென்னை
யிலும் இவருக்குச் சொந்தமாக வீடுகள் உள்ளன. அவற்றைத் தவிர, இடங்களை வாங்கி அவற்றில் தன்னுடைய பணத்தை முதலீடு செய்வதில் மும்முரமாக இருக்கிறார்.
மொத்தமாக இவருடைய சொத்து மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இது அதிகார பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை அடுத்து இரண்டாவது இடத்தில் சமந்தா ரூ.3 கோடி 50 லட்சம் வரை ஒரு படத்தில் நடிக்க சம்பளம்
வாங்குகிறார்.
அவரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் அனுஷ்கா ரூ.3 கோடி, நான்காவது இடத்தில் கீர்த்தி சுரேஷ் ரூ.3 கோடி, ஐந்தாவது இடத்தில் காஜல் அகர்வால், திரிஷா ஆகியோர் ரூ.2 கோடியும் சம்பளமாகப் பெறுகின்றனர்.

