2021 இணையவாசிகளால் மதிப்பீடு வழங்கப்பட்ட சிறந்த பத்து படங்கள்

ஐ.எம்.டி.பி இணையத்தளமானது உலக திரைப்படங்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வழங்கும் தளமாக விளங்குகின்றது. `இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ்' என்பதே சுருக்கமாக

ஐ.எம்.டி.பி என்றழைக்கப்படுகிறது. இந்த இணையத்தளத்தின் பயனாளர்கள் படங்களுக்கு கொடுக்கும் மதிப்பீட்டுப் புள்ளிகளை வைத்து படங்களுக்கு தரவரிசை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் 2021ஆம் ஆண்டில் இணையத்தளத்தில் அதிக மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெற்ற சிறந்த பத்து படங்களைத் தரவரிசைப்படி ஒரு கண்ணோட்டம்.

காடன்:

இப்படத்தை பிரபு சாலமன் எழுதி இயக்கியுள்ளார். 'ஈரோஸ் இன்டர்நேஷனல்' தயாரித்த இந்தப் படத்தில் ராணா, விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், ஸ்ரியா பில்கோங்கர், சோயா உசேன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கில் 'ஆரண்யா' எனவும் இந்தியில் 'ஹாதி மேரே சாதி' என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பதிப்பிலும் சில நடிகர்கள் மட்டும் மாறுபட்டுள்ளனர். இந்தப் படம் 2020 ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொவிட்-19 பெருந்தொற்றால் தாமதமாகி 26 மார்ச் 2021 அன்று வெளியிடப்பட்டது. தர வரிசையில் 8.9 பெற்றிருக்கிறது.

சர்பட்டா பரம்பரை:

வரலாற்று, விளையாட்டு அதிரடித் திரைப்படம் 'சர்பட்டா பரம்பரை'. இதை பா. ரஞ்சித் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் ஆர்யா, ஷபீர் கல்லரக்கல், துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 'சர்பட்டா பரம்பரை' முதலில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் கொவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக, தயாரிப்பாளர்கள் இதை 'ஓடிடி'யில் வெளியிட முடிவெடுத்தனர். வெளியீட்டு உரிமைகள் 'அமேசான் பிரைம் வீடியோ'வால் பெறப்பட்டன. திரைப்படம் 2021 ஜூலை 22 அன்று பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. தர வரிசையில் 8.8 பெற்றிருக்கிறது.

மண்டேலா:

இந்திய தமிழ் அரசியல் நையாண்டி திரைப்படம் 'மண்டேலா'. இப்படத்தை அறிமுக இயக்குநரான மடோன் அஸ்வின் எழுதி, இயக்கியுள்ளார். மறைந்த தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் பெயரானது இந்தப் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது வழிகாட்டி பாத்திரத்தில் ஷீலா ராஜ்குமாரும் கண்ணா ரவி, சங்கிலி முருகன்,

ஜி.எம்.சுந்தர் ஆகியோர் பிற பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை பரத் சங்கர் அமைக்க, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவற்றை விது அய்யன்னா, பிலோமின் ராஜ் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. இப்படம் நேரடியாக 2021 ஏப்ரல் 4 அன்று விஜய் தொலைக்காட்சி வழியாகவும் மறுநாள் அனைத்துலக அளவில் 'நெட்பிளிக்ஸ்' தளத்திலும் வெளியிடப்பட்டது. தர வரிசையில் 8.5 பெற்றிருக்கிறது.

கர்ணன்:

'கர்ணன்' திரைப்படத்தை மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். 'வி கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தானு தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷ், யோகி பாபு, லால், நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தனுஷ் போன்ற 'மாஸ்' நடிகர் படத்தில் இருந்தாலும் அவருக்காக கதையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் மாரி செல்வராஜ். தர வரிசையில் 8.2 பெற்றிருக்கிறது.

மாஸ்டர்:

'மாஸ்டர்' படம் சண்டை, பரபரப்பான காட்சிகள் அடங்கிய திரைப்படம் ஆகும். லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்க சேவியர் பிரிட்டோ, சுனே ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கான ஒளிப்பதிவு சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பு பிலோமின் ராஜ் பொறுப்பேற்று இருக்கின்றனர். இந்தப் படம் 2021 ஜனவரி 13 அன்று வெளியானது. தர வரிசையில் 7.9 பெற்றிருக்கிறது

மாறா:

காதல் திரைப்படம் 'மாறா'. இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குநர் திலீப் குமார் என்பவர் இயக்க பிரதீக் சக்கரவர்த்தி, சுருதி நல்லப்பா ஆகியோர் தயாரிக்க மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது மார்ட்டின் பிரகாட் எழுதிய மலையாள திரைப்படமான 'சார்லி' என்ற திரைப்படத்தின் மறு பதிப்பு ஆகும். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோவில் 17 டிசம்பர் 2020 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. பின்னர்

8 ஜனவரி 2021 அன்று அமேசான் பிரைம் வீடியோ 'ஓடிடி' தளத்தில் வெளியானது. தர வரிசையில் 7.7 பெற்றிருக்கிறது.

பொன் மாணிக்கவேல்:

பிரபுதேவாவின் 50வது படமான 'பொன் மாணிக்கவேல்' என்ற படத்தை ஏசி முகில் செல்லப்பன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், பிரபுதேவா முதல் முறையாக காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். சுரேஷ் சந்திரா மேனன், மஹேந்திரன் என பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படமானது பிரபல இயக்குநரும் நடிகருமான ஜெ. மஹேந்திரனின் இறுதி தமிழ் திரைப்படம். தர வரிசையில் 7.1 பெற்றிருக்கிறது.

சக்ரா:

அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் விஷால், ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அதிரடி, திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தை நாயகன் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரெஜினா கசாண்ட்ரா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது கணினி குற்றங்கள், இணைய வணிக மோசடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு பிப்ரவரி 19 அன்று திரையரங்குகளில் வெளியானது. தர வரிசையில் 6.9 பெற்றிருக்கிறது.

டெடி:

மருத்துவ அதிரடி பரப்பரப்பூட்டும் திரைப்படம் 'டெடி'. சக்தி சௌந்தர்ராஜன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் ஒரு 'டெடி பியர்' முதன்மைக் கதாபாத்திரமாக நடித்துள்ளது. மேலும் ஆர்யா சாயிஷாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சதீஸ், சாக்‌ஷி அகர்வால், மகிழ் திருமேனி ஆகியோர் இப்படத்தில் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். படத்தை ஸ்டுடியோ கிரீன் என்ற பதாகையின் கீழ் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். அசைவூட்ட கதாபாத்திரத்தை வடிவமைக்க இந்திய அசைவூட்ட நிறுவனத்தைப் பயன்படுத்திய முதல் தமிழ்ப் படம். மேலும் கோச்சடையானுக்குப் பிறகு 'மோஷன்-கேப்சர்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய இரண்டாவது தமிழ்ப் படம். இது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 12 மார்ச் 2021ல் வெளியிடப்பட்டது. தர வரிசையில் 6.6 பெற்றிருக்கிறது.

சுல்தான்:

அதிரடி, காதல் திரைப்படம் 'சுல்தான்'. இத்திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க எஸ் ஆர் பிரகாஷ் பாபு 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்து இருந்தார்.இத்திரைப்படத்தில் கார்த்திக், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை அமைத்திருக்கிறார். இதர பாடல்களை விவேக்-மெர்வின் கூட்டணி உருவாக்கியுள்ளது. இத்திரைப்படம் 22 ஏப்ரல் 2021 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. தர வரிசையில் 6.4 பெற்றிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!