'எதற்கும் துணிந்தவன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. 'உள்ளம் உருகுதய்யா...' என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இந்தப் படத்தில் அவரது ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் படம் என்பதால் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியீடு காண உள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'வாடா தம்பி...' என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சிகளில் சூர்யா அசத்தலாக நடித்துள்ளாராம்.

