ராஜா, ரஜினி கூட்டணி

ராஜா, ரஜினி கூட்டணி

1 mins read
1fd47372-a8c4-4ccc-bec2-714e7ef11795
-

முப்­பது ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் ஒரு திரைப்­ப­டத்தை தயா­ரிக்க உள்­ளார் இளை­ய­ராஜா. அப்­ப­டத்­தின் நாய­க­னாக ரஜினி நடிக்க உள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

பாலி­வுட் இயக்­கு­நர் பால்கி, இளை­ய­ரா­ஜா­வின் தீவிர ரசி­கர். அண்­மை­யில் இவர் ரஜி­னி­யைச் சந்­தித்து ஒரு கதை­யைக் கூறி­ய­தா­க­வும், அது ரஜி­னிக்­குப் பிடித்­துப்­போ­ன­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இத்­த­க­வலை பால்கி இளை­ய­ரா­ஜா­வி­டம் தெரி­விக்க, அந்­தப் படத்தை தாமே தயா­ரிக்க முன்­வந்­துள்­ளா­ராம் இளை­ய­ராஜா.

'அலை­கள் ஓய்­வ­தில்லை', கோழி கூவுது, கொக்­க­ரக்கோ, கீதாஞ்­சலி, என் பொம்­முக்­குட்டி அம்­மா­வுக்கு, ராஜாதி ராஜா, சிங்­கா­ர­வே­லன் உள்­ளிட்ட பல்­வேறு படங்­க­ளைத் தயா­ரித்­துள்­ளார் இளை­ய­ராஜா.

கடை­சி­யாக கடந்த 1994ஆம் ஆண்டு வெளி­யான 'வீரா' படத்­தில் அவர் ரஜி­னி­யு­டன் இணைந்து பணி­யாற்­றி­னார். இதை­ய­டுத்து, 28 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அவர் ரஜினி படத்­துக்கு இசை­ய­மைக்க உள்­ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.