ரத்தம் சிந்தி உழைத்துள்ளனர்: சிவகார்த்திகேயன் பாராட்டு

ரத்தம் சிந்தி உழைத்துள்ளனர்: சிவகார்த்திகேயன் பாராட்டு

1 mins read
093a1b2e-bb75-4521-8428-794679dd8b55
'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். -

ராஜ­ம­வுலி இயக்­கத்­தில் உரு­வாகி உள்ள 'ரத்­தம் ரணம் ரெளத்­தி­ரம்' ('ஆர்­ஆர்­ஆர்') படத்­துக்­காக ரத்­தம் சிந்தி உழைத்­துள்­ள­னர் என்று சிவ­கார்த்­தி­கே­யன் கூறி­யுள்­ளார்.

சென்­னை­யில் நடை­பெற்ற இப்­படத்­தின் இசை வெளி­யீட்டு விழா­வில் கலந்­து­கொண்டு பேசிய அவர், படத்­தின் நாய­கர்­க­ளான ராம் சரண், ஜூனி­யர் என்.டி.ஆர். ஆகிய இரு­வரை­யும் புலி அல்­லது சிங்­கம் எனக் குறிப்­பி­ட­லாம் என்று நகைச்­சு­வை­யா­கப் பேசி­னார்.

"அந்த அள­வுக்கு இரு­வ­ரும் திரை­யில் மிரட்­ட­லாக நடித்­துள்­ள­னர். இந்­தி­யா­வுக்கு சுதந்­தி­ரம் பெற்­றுத் தர ஏரா­ள­மா­னோர் ரத்­தம் சிந்­தி­னார்­கள் எனில், இந்­தப் படத்­துக்­கா­க­வும் பலர் ரத்­தம் சிந்­தி உள்­ள­னர்.

"இப்படத்தை திரையரங்கில் பார்ப்பதே நல்ல கலைஞர்களுக்கு நாம் தரும் மரியாதை," என்றார் சிவகார்த்திகேயன்.