திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
cfbc777e-73eb-4669-8f48-d916bd21d8a9
-
multi-img1 of 3

 நல்ல திரைக்கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் மட்டுமே தம்மை இந்திப் படங்களில் காண முடியும் என்கிறார் சாய் பல்லவி.

அண்மையில் ரசிகர்களு டன் இணையம் வழி உரையாடியபோது, இந்திப் படங்களில் நடிக்க தமக்கும் விருப்பம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

"எந்த மொழியாக இருந்தாலும், எனது கதாபாத்திரத்துக்கு ஓரளவு முக்கியத்துவம் இருக்க வேண்டும். இதை எனது நிபந்தனையாகவும் கருதலாம். இந்திப் படங்களும் இந்த நிபந்தனைக்கு உட்பட்டவைதான்," என்கிறார் சாய் பல்லவி.

 'ஜான்சி' என்ற இணையத் தொடரில் நடித்துள்ளார் அஞ்சலி. இயக்குநர் திரு இயக்கியுள்ள இந்தத் தொடரில் அடிதடி சண்டைக் காட்சிகளும் திடீர் திருப்பங்களும் இடம்பெற்றுள்ளனவாம்.

"முதன்முறையாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதனால் படப்பிடிப்பின்போது எல்லாம் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றியது. என்னை இதுபோன்ற வேடத்தில் பார்ப்பது ரசிகர்களுக்கும் புதிதாக இருக்கும்," என்கிறார் அஞ்சலி. இத்தொடரை நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார்.

 வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜனவரி 18ஆம் தேதி தொடங்குகிறது.

அண்மையில் லண்டன் சென்று திரும்பிய வடிவேலுவுக்கும் இப்படத்தின் இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்குமா எனும் கேள்வி எழுந்தது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி 18ஆம் தேதிக்குள் இருவரும் தொற்றில் இருந்து மீண்டு வருவார்கள் என்றும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.