பாலிவுட் நடிகரான சல்மான் கான், ஓய்வு நேரத்தின்போது தமக்கென பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பை அருகே உள்ள பன்வேல் நகரில் அவர் ஆட்டோ ஓட்டுவதைக் கண்டு அங்கிருந்த பலரும் உற்சாகம் அடைந்தனர்.
அதை அவர்கள் காணொளிப் பதிவு செய்தனர். டீ-சட்டை, தொப்பி அணிந்திருந்த சல்மான் கான், பரபரப்பான வீதி ஒன்றில் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். ஆட்டோவின் பின் இருக்கையில் பயணி ஒருவர் இருந்ததாகத் தெரிகிறது.
கடந்த திங்கட்கிழமைதான் சல்மான் கான் தமது 56வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பிறந்தநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு, பண்ணை வீட்டில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவரை பாம்பு கடித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து பிறந்தநாள் வருவதற்குள் வீடு திரும்பிவிட்டார்.