தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் டி.இமான், தம்முடைய மனைவியுடன் மணவிலக்கை அறிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தம்முடைய டுவிட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்ட அவர், "நானும் (என் மனைவி) மோனிகா ரிச்சர்டும் மணவிலக்கு செய்துகொண்டோம். நாங்கள் மனப்பூர்வமாக பிரிகிறோம். நலம் விரும்பிகள், ஊடகத்துறையினர் அனைவரும் நாங்கள் இதனைக் கடந்துபோக உதவுங்கள். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி," என்று கூறினார்.

