திரைச்செய்திகள்

திரைச்செய்திகள்

2 mins read
8841ea17-3b0a-4e91-a5ed-f53a19315775
-

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் 'அழகா அழகா உள்ளம் உருகுதைய்யா' என்ற பாடலில் சூர்யா முருகக் கடவுள் போலவும் ராஜ அலங்காரத்திலும் தோன்றி நடித்துள்ளார். இந்நிலையில் இந்த பாடல் பற்றி சூர்யா தன்னுடைய டுவிட்டரில் "நீண்ட நாள்களுக்குப் பிறகு ரொம்ப வெட்கப்பட வைத்து விட்டீர்கள் இயக்குநரே," என்று பதிவிட்டுள்ளார்.

தமன்னா படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளிநாடுகளுக்குப் பறந்துவிடுவார். ஆனால் தற்பொழுது கொரோனா பயத்தினால் அவர் பெற்றோருடன் ஜம்முவிலுள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அவர் தன்னுடைய டுவிட்டரில், "பெற்றோருடன் ஆன்மீகப் பயணமாக கோயில்களுக்குச் செல்வது மனதுக்கு நிம்மதியைத் தருகிறது. எந்த கோயிலுக்குச் சென்றாலும் அங்கு சாமி தரிசனம் செய்வதுடன் தியானத்திலும் ஈடுபடுகிறேன். இது எனது மனசை இலேசாக்குகிறது. ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவள் நான். அதனால் தொடர்ந்து ஒரு மாத பயணமாக பல்வேறு கோயில்களுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளேன்'," என்று பதிவிட்டு படங்களையும் பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதி கிறிஸ்மஸ் தினத்தன்று 90 நிமிடங்கள் ஓடக்கூடிய 'மேரி கிறிஸ்மஸ்' என்ற இந்திப் படத்தில் கத்ரினா கைப்புடன் இணைந்து நடிக்கத் தொடங்கி இருக்கிறார். திரில்லர் படங்களை எடுப்பதில் கைதேர்ந்த இயக்குநரான ஸ்ரீராம் ராகவன் இந்தப் படத்தையும் திரில்லர் கதையாக உருவாக்கியுள்ளார். எதிர்மறை குணாதிசயம் கலந்த நாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி.

கொரோனா மூன்றாம் அலை காரணமாக டெல்லியில் உள்ள 90 திரையரங்குகளை முழுவதுமாக மூடுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ள 'ஆர்ஆர்ஆர்' படமும் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக உள்ள 'ராதே ஷ்யாம்' படங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.