'தங்கம் தேடி வந்தது'

'தங்கம் தேடி வந்தது'

1 mins read
360ff513-3db2-42ba-8027-f18441fe51c5
-

தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம் உள்­ளிட்ட மொழி­களில் முன்­னணி கதா­நா­ய­கி­யாக நடித்து வரு­கி­றார் அம­லா­பால். பாலி­வுட்­டில் வெற்றி பெற்ற 'லஸ்ட் ஸ்டோ­ரிஸ்' படத்­தைத் தெலுங்­கில் இவ­ரின் நடிப்­பில் 'பிட்ட கதாலு' என்ற பெய­ரில் மறு­ப­திப்பு செய்­யப்­பட்டு வெளி­யாகி, டோலி­வுட்­டில் மிகப் பெரிய அள­வில் வெற்றி பெற்­றுள்­ளது.

இந்­நி­லை­யில் அமலா பால் தனக்கு ஐக்­கிய அமீ­ரக அர­சின் கோல்­டன் விசா கிடைத்­துள்­ள­தாக இன்ஸ்­ட­கி­ரா­மில் தெரி­ வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக அவர் தன்­னு­டைய

பதி­வில் "தங்­கத்தை தேடி ஓட வேண்­டும்

என்­பார்­கள். நானும் ஓடி­னேன். எனக்கு கோல்­டன் விசா கிடைத்­து­விட்­டது. இந்த விசா எனக்கு கிடைக்க கார­ண­மா­ன­வர்­க­ளுக்கு என் நன்­றி­யைத் தெரி­வித்­து­கொள்­கி­றேன்," என்று பதி­விட்­டுள்­ளார்.

இவ­ருக்கு முன்பு தமிழ்த் திரை­யில் முதன் முத­லாக கோல்­டன் விசா கிடைத்த நடிகை திரிஷா. அவ­ருக்­குப் பிறகு நடி­கர் பார்த்­தி­ப­னுக்கு கிடைத்­தது.

இந்­நி­லை­யில் அமலா பால், கோல்­டன் விசா பெற்­ற­தற்கு ரசி­கர்­கள் வாழ்த்து தெரி­வித்து வரு­கின்­ற­னர்.