எளிய மனிதர்களைப் பற்றி பேசுகிறது 'ஆதார்'

எளிய மனிதர்களைப் பற்றி பேசுகிறது 'ஆதார்'

2 mins read
8f6e3129-14b4-4b68-8c57-dd6c426f51a2
'ஆதார்' படத்தின் ஒரு காட்சியில் கருணாஸ், ரித்விகா. -

அர­சி­யல் களத்­தில் இருந்து சில காலம் விலகி நின்று, மீண்­டும் திரை­யு­ல­கின் கவ­னத்­தை தன் பக்கம் திருப்பியுள்ளார் கரு­ணாஸ்.

கடந்த ஆண்டு 'சூர­ரைப் போற்று', 'சங்­கத் தலை­வன்' என இரண்டு படங்­களில் மட்­டுமே நடித்­தி­ருந்­த­வ­ருக்கு இப்­போது 'ஆதார்', 'விரு­மன்' என்று அவர் கைவசம் அரை ­ட­ஜன் படங்­கள் உள்­ளன. 'ஆதார்' படத்­தின் நாய­க­னும் இவர்­தான்.

''என் மனை­விக்கும் மக­னுக்­கும் நான் எப்­போ­துமே கதா­நா­ய­கன்­தான். அதில் எந்த மாற்­ற­மும் கிடை­யாது. ஆனால் நான் நாய­க­னாக நடிக்­கும் படத்­தைப் பொறுத்­த­வரை எப்­போ­துமே கதை­தான் நாய­கன். 'ஆதார்' அடிப்­படை மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளைப் பேசும் படம்.

"குறிப்பாக மலை­வாழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளைப் பேசு­கிறது. 'ஜெய்­பீம்' போல அழுத்­த­மான கதை. எளிய மனி­தர்­க­ளின் வலி­களை­யும் வேத­னை­க­ளை­யும் இயல்­பா­க­வும் யதார்த்­த­மா­க­வும் பேசும். இதில் அர­சி­யல் இருக்­கிறது. ஆனால் அது உலக அர­சி­யல்."

"மலைக்­கி­ரா­மத்­தில் இருந்து சென்­னைக்கு ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் வேலைக்கு வரும் ஒரு கண­வன், மனை­வி­யைச் சுற்றி நடக்­கும் விஷ­யங்­கள்­தான் கதை. அருண்­பாண்­டி­யன் சார், ஆனந்த்­பாபு, 'பாகு­பலி' வில்­லன் பிர­பா­கர், இனியா, ரித்­விகா எனப் பலர் நடித்­துள்­ள­னர். 'அம்­பா­ச­முத்­தி­ரம் அம்­பானி', 'திரு­நாள்' படங்­களை இயக்கிய ராம்­நாத் பழ­னிக்­குமார் இதை இயக்கி உள்­ளார்.

"ஸ்ரீகாந்த் தேவா­வும் பால்­ஜேவும் இசை­ய­மைத்­துள்­ள­னர்," என்று சொல்­லும் கருணாஸ், 'விரு­மன்' படத்­தில் பாலு என்ற அழுத்­த­மான கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளா­ராம். கதைப்­படி, நாய­கன் கார்த்­திக்கு இவர்­தான் தாய்­மா­ம­னாம்.

இந்­தப் படத்­தில் நடிக்க ஒப்பந்­த­மா­கும் முன்பு, என் தோட்­டத்­தில் வெட்­டி­யாக உட்­கார்ந்து ஆடு மாடு மேய்த்­துக் கொண்­டி­ருந்­தேன். நடிக்க முடி­யுமா என்று கேட்­ட­னர். உடனே ஒப்­புக்­கொண்­டேன்.

"இந்­தப் படத்­தின் கதை பாலு என்ற கதா­பாத்­தி­ரத்­தில்­தான் தொடங்­கும். கதையை முடித்து வைப்­ப­தும் அதே பாத்­தி­ரம்­தான். மீண்­டும் ஓர் அழுத்­ த­மான கதா­பாத்­தி­ரம் அமைந்­தது மகிழ்ச்­சி­யும் மன­நி­றை­வும் தந்­தி­ருக்­கிறது," என்கிறார் கருணாஸ்.