சர்ச்சை தலைப்பு: விளக்கமளித்த சத்யராஜ்

1 mins read
dbe4fb48-7ecc-40c2-beed-bbefd82c044f
'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. -

தீரன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ளது 'தீர்ப்புகள் விற்கப்படும்' திரைப்படம்.

விரைவில் வெளியீடு காண உள்ள நிலையில், படத்தின் தலைப்பு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி யில் கலந்துகொண்ட முன்னாள் நீதிபதி சந்த்ருவும் காவல்துறை அதிகாரி திலகவதியும் தலைப்பை ஆதரித்துப் பேசினர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இப்படம் வன்முறையைத் தூண்டாது என்றும் திரையரங்கில் படத்தைப் பார்த்த பிறகு படத்தின் தலைப்பு மிகப் பொருத்தமாக உள்ளது என்பதை ரசிகர்கள் நிச்சயம் உணர்வார்கள் என்றும் சத்யராஜ் கூறியுள்ளார்.

"நேர்­மை­மிக்க, அப்­பாவி மக்­க­ளுக்கு ஆத­ர­வா­கச் சட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்­டால், எந்­த­வொரு சாமா­னி­ய­னும் சட்­டத்தை தன் கையில் எடுக்க வேண்­டிய அவ­சி­யம் எழாது. இந்­தக் கருத்தை வலு­வாக நியா­யப்­ப­டுத்­தும் வகை­யில் படம் உரு­வாகி உள்­ளது," என்று சத்­ய­ராஜ் தெரி­வித்­துள்­ளார்.

படத்­தில் தமது கதா­பாத்­தி­ரம் மிக வலு­வா­ன­தாக அமைக்­கப்­பட்­டுள்­ளது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், கதை­யைக் கேட்ட உட­னேயே படப்­பி­டிப்­புக்­குச் செல்ல வேண்­டும் என்று தோன்­றி­ய­தா­கத் தெரி­வித்­துள்­ளார். படம் விரை­வில் வெளி­யீடு காண உள்­ளது.