'இனி எப்போதும் உங்களை நம்புவேன்'

'இனி எப்போதும் உங்களை நம்புவேன்'

1 mins read
86b59604-0a77-43fc-b70a-fb58b0df3223
-

'புஷ்பா' படத்­தில் இடம்­பெற்­றுள்ள பாட­லுக்கு நட­ன­மாட சமந்தா தயங்­கி­ய­தாக அப்­ப­டத்­தின் நாய­கன் அல்லு அர்­ஜுன் தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும், தாம் சொன்­னதை ஏற்­றுக்­கொண்டு சமந்தா நடித்­த­தாக அவர் நிகழ்ச்சி ஒன்­றில் பேசும்­போது குறிப்­பிட்­டார்.

அந்தப் பாடல் இணை­யத்­தில் இது­வரை சுமார் நூறு மில்­லி­யன் பார்­வை­க­ளைப் பெற்­றுள்­ளது.

"பாடல் நிச்­ச­யம் வெற்றி பெறும் என்று நான் கூறி­யதை நம்­பி­னார். இப்­போது அதே பாடல் உல­கம் முழு­வ­தும் பலத்த வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது," என்­றார் அல்லு அர்­ஜுன்.

இந்­நி­லை­யில், அவ­ரது இந்­தப் பேச்­சைக் குறிப்­பிட்டு, 'இனி எப்­போ­தும் உங்­களை நம்­பு­வேன்' என டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார் சமந்தா. அப்பதி­விற்கு இத­யம் போன்ற 'எமோஜி'யைப் பின்­னூட்­ட­மிட்­டுள்­ளார் அல்லு அர்­ஜுன்.