பிப்ரவரி 22: புதிர் போடும் விக்னேஷ் சிவன்

பிப்ரவரி 22: புதிர் போடும் விக்னேஷ் சிவன்

1 mins read
f9f929c2-7716-434c-8ecf-38556fbaa6a1
-

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் என செய்தி வெளியாவதும் அது நடக்காமல் போவதும் வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில், விக்னேஷ் சிவனின் சமூக வலைத்தளப் பதிவு ஒன்று இந்த காதல் ஜோடியின் திருமணம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

"யாரெல்லாம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள். நான் இந்தத் தேதியை தவறவிட விரும்பவில்லை" என்று அந்தப் பதிவில் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளதே பரபரப்புக்கு காரணம்.