விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ்.
இவர் 'வலிமை' படத்தில் அஜித்துடன் நடித்துள்ளார். அந்தக் காட்சிகள் படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பில் இடம்பெற்றன.
இதையடுத்து பலரும் புகழைத் தொடர்புகொண்டு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இதனால் நெகிழ்ந்து போயுள்ள புகழ், 'இப்படியொரு மகிழ்ச்சியை அளித்துள்ள அஜித்துக்கு எவ்வாறு நன்றி தெரிவிப்பது என்று தெரியவில்லை' என தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"இந்த மகிழ்ச்சியை எப்படிக் கொண்டாடுவது என்றும் தெரியவில்லை. தன்னுடன் பயணம் செய்யும் வாய்ப்பை எனக்களித்த அஜித் சாருக்கு என் நன்றி," என்று குறிப்பிட்டுள்ள புகழ், தாம் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அப்பதிவில் பகிர்ந்துள்ளார்.
தற்போது, சூர்யா நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்', விஜய் சேதுபதியின் 46வது படம், யோகி பாபு நடிக்கும் 'காக்டெய்ல்', அஸ்வின் குமாரின் 'என்ன சொல்ல போகிறாய்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் புகழ்.
முன்னதாக இளம் நாயகனுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படத்தின் விளம்பர நிகழ்வில் பங்கேற்றார் புகழ்.
அப்போது அவர்கள் இருவருக்கும் ஏழெட்டு மெய்க்காவலர்களும் வந்திருந்தனர். எந்த ரசிகரும் இருவரையும் நெருங்கிவிடாதபடி பார்த்துக் கொண்டனர். இதனால் புகழ் பந்தா செய்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் அந்தக் காவலர்களை, புகழும் அந்த இளம் நாயகனும் அழைத்து வரவில்லையாம். படத்தின் தயாரிப்பாளர்தான் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார்.
இதையறிந்த ரசிகர்கள் புகழிடம் வருத்தம் தெரிவிக்க, அதற்கும் நெகிழ்ந்து போனாராம்.