கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா பாதிப்பு

கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா பாதிப்பு

1 mins read
56f7ee86-59a4-44f3-b762-822199fbb128
-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திரையுலகத்தினர் பட்டியலில் கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். எனினும் அதையும் மீறி தொற்றுக்கு ஆளாகி உள்ளார். "என்னை தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தொற்றுப் பரவலின் வேகம் அச்சுறுத்துகிறது. தயவு செய்து அனைவரும் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்," என்று தமது சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி. இதற்கிடையே, 'பிக்பாஸ்' நிகழ்ச்சி யில் பங்கேற்ற நடிகைகள் ரைசா வில்சன், ஷெரின் ஆகி யோரையும் கிருமி தொற்றியுள்ளது. நடிகர் சத்யராஜ், திரிஷா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.