திரைத் துளி­கள்

 நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தபடியே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படம் சத்தமின்றி வளர்ந்து வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் அமீரின் அடுத்த படத்தில் சூரிதான் கதாநாயகன் என்று கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகுமாம்.

இதற்கிடையே, ‘டான்’, ‘விருமன்’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சூரி.

 தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் இருந்து தாம் விலகவில்லை என சம்யுக்தா மேனன் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது இப்படம். இதன் நாயகியாக சம்யுக்தா ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்பட்டது.

எனினும், சில தினங்களிலேயே அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. இதனால் தனுஷ் ரசிகர்கள் குழப்பம் அடைந்த நிலையில், தாம் ‘வாத்தி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் சம்யுக்தா மேனன்.

தாம் சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘வாத்தி’ சார் படப்பிடிப்பில் என்னுடைய முதல் நாள் என்று குறிப்பிட்டுள்ளார் சம்யுக்தா.

 விஜய் சேதுபதியின் 46வது படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் ‘பிக்பாஸ்’ ஷிவானி.

அவர் இயக்குநர் பொன்ராமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சேதுபதியின் 46வது படத்தை பொன்ராம் இயக்குவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், சிறந்த இயக்குநருடன் பணியாற்றுவது பெருமையாக உள்ளது என தமது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஷிவானி.

 நடிகர் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை இயக்குநர் சசி இயக்குகிறார். சித்தி இட்னானி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹரிஷ் நடிக்கும் படத்தின் தலைப்பை யும் சுவரொட்டியையும் வெளியிட்டுள்ளனர். ‘நூறு கோடி வானவில்’ என்பதுதான் தலைப்பாம். நடிகர்கள் விஜய் ஆண்டனி, சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் இவற்றை வெளியிட்டுள்ளனர்.

 விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் கூட் டணி அமைத்துள்ளனர். விஷாலின் 33வது படமாக உருவாகும் இப்படத்துக்கு ‘மார்க் ஆண்டனி’ என்று தலைப்பு வைத்துள்ள னர். இதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கி றார். இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு விஷால் நடித்த ‘நான் சிவப்பு மனிதன்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!