'எனக்கு இசையும் வேண்டும்'

'எனக்கு இசையும் வேண்டும்'

3 mins read
0715ff80-06ad-4044-974d-ec6dcaef9e9d
-

இனி திரைப்­ப­டங்­களில் நடிப்­ப­து­டன், அவற்­றுக்கு இசை­ய­மைக்கவும் கணி­ச­மான நேரத்தை ஒதுக்­கப்போவ­தா­கக் கூறு­கி­றார் நடி­கர் ஜெய். தற்­போது சுசீந்­தி­ரன் இயக்­கத்­தில் 'சிவ­சிவா' என்ற படத்­தில் நடித்து முடித்­துள்­ளார்.

சுசீந்­தி­ர­னின் அடுத்த படத்­துக்கு இவர்­தான் இசை­ய­மைப்­பா­ளர். மொத்­தம் ஆறு பாடல்­க­ளுக்கு மெட்­ட­மைத்­துள்­ளா­ராம்.

"சுசீந்­தி­ரன் சார் படம் இயக்­கும் விதம் எனக்கு ரொம்­பப் பிடிக்­கும். அவர் இயக்­கிய 'நான் மகான் அல்ல' படத்­தைப் பார்த்­துட்டு, ஒரு­மு­றை­யா­வது அவ­ரது இயக்­கத்­தில் நடிக்க வேண்­டும் என்று நினைத்­தேன். இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு திடீ­ரென ஒரு­நாள் தொடர்பு கொண்­டார். உட­ன­டி­யாக திண்டுக்­கல் பகு­திக்கு வரு­மாறு கூறி­னார். என்ன, ஏது என்று எதுவுமே கேட்­கா­மல் அவர் முன்னே போய் நின்­றேன்.

"அங்­கு­தான் படத்­தின் கதையை விவ­ரித்­தார். எனக்­கும் பிடித்­தி­ருந்­தது. உடனே படப்­பி­டிப்­பில் கலந்து கொண்­டேன். அது­தான் 'குற்­றம் குற்­றமே' படம். அவ­ரி­டம் தனிப்­பட்ட வகை­யி­லும் தொழில் ரீதி­யி­லும் நிறைய விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொண்­டேன். இந்­தப் படம் முடிந்­த­வு­டன் இன்­னொரு முறை கூட்­டணி அமைப்­போமா என்­றார். அது­தான் 'சிவ­சிவா.'

"இரு மொழி­களில் தயா­ரா­கும் படம். தெலுங்­குப் பதிப்­பில் ஆதி­யும் நிக்கி கல்­ரா­ணி­யும் நடித்­துள்­ள­னர். தமி­ழில் நானும் மீனாட்­சி­யும் நடிக்­கி­றோம்.

"படப்­பி­டிப்பு தொடங்­கி­யது, முடிந்­தது என்று எது­வுமே தெரி­ய­வில்லை. அந்த அள­வுக்கு விறு­வி­றுப்­பாக படப்­பி­டிப்பை நடத்தி முடித்­தார் சுசீந்­தி­ரன் சார். இறுதிக்­கட்­டப் படப்­பி­டிப்­பின்­போது, நாம் மீண்­டும் இணை­வோம் என்று அவர் சொன்­ன­தும் மிகு­ந்த மகிழ்ச்சி ஏற்­பட்­டது.

"திண்­டுக்­கல் படப்­பி­டிப்­பின்­போது அங்­கி­ருந்த ஒரு மாட்­டுக் கொட்­ட­கை­யில் அமர்ந்து நான் ஏற்­கெ­னவே இசை­ய­மைத்த ஒரு பாடலை கைபே­சி­யில் ஒலிக்­கச் செய்து கேட்­டுக்கொண்­டி­ருந்­தேன். அப்­போது அங்கு வந்த சுசீந்­தி­ரன் சாருக்கு அந்­தப் பாடல் பிடித்­துப்போனது. பெரிய இசை­யமைப்­பா­ள­ரின் பெய­ரைக் குறிப்­பிட்டு, அவர் இசை­ய­மைத்த பாடலா என்று கேட்­டார். நான்­தான் இசை­ய­மைத்­தேன் என்­ற­தும் அவ­ருக்கு வியப்பு.

"அந்த இடத்­தி­லேயே தனது அடுத்த படத்­துக்கு நான்­தான் இசை­ய­மைப்­பா­ளர் என்று முடிவு எடுத்­து­விட்­டார். எனக்கு தயக்­க­மாக இருந்­தது. ஆனால் அவரோ, ஆறு பாடல்­கள் இருப்­ப­தா­க­வும் அவற்றுக்கு மெட்­ட­மைக்­கு­மா­றும் கூறி­னார். அவர் தந்த உற்­சா­கத்­தில் ஆறு பாட­லை­யும் தயார் செய்­து­விட்­டேன்," என்­கி­றார் ஜெய்.

இசை­ய­மைப்­பா­ளர் ஆக வேண்­டும் என ஏதோ ஆர்வக்­கோ­ளா­றில் முடி­வெ­டுக்­க­வில்லை ஜெய். லண்­ட­னில் உள்ள ட்ரி­னிடி இசைக்­கல்­லூ­ரி­யில் படித்­த­வ­ராம். மேற்­கத்­திய இசை­யில் ஐந்­தா­வது படி­வம் (கிரேட்) வரை முடித்­துள்­ளார்.

"முறைப்­படி இசை கற்­றா­லும், இசைத்­து­றை­யில் எனக்கு ஆர்­வம் ஏற்­ப­டக் கார­ணம் இசை­ய­மைப்­பாளர் தேவாதான். அவர் எனது உற­வி­னர். அவரை அப்பா என்று­தான் குறிப்­பி­டு­வேன். அவ­ரு­ட­னும் ஸ்ரீகாந்த் (தேவா­வின் மகன்) அண்­ண­னு­ட­னும் ஒலிப்­ப­தி­வுக் கூடத்­தில் இருக்­கும்­போதே அவர்­கள் எப்­படி வேலை செய்­கி­றார்­கள் எனக் கவ­னிப்­பேன்.

"நடிப்பு மட்டுமல்ல, எனக்கு இசையும் வேண்டும். கீ போர்ட் வாசிப்­பது என்­றால் ரொம்­பப் பிடிக்­கும். நேரம் கிடைக்­கும்­போ­தெல்­லாம் அதில் மூழ்­கிப் போவேன். சில மெட்டுக்­களைப் போட்டு இரு­வ­ரி­ட­மும் கருத்து கேட்­பேன். சில திருத்­தங்­க­ளைச் சொல்­வார்­கள். அதை­விட, எனது முயற்­சியை மிக­வும் பாராட்­டு­வார்­கள். தவ­று­க­ளைத் திருத்­திக் கொண்டு பக்­கு­வ­மான இசை­ய­மைப்­பா­ள­ராக மாறி­யி­ருப்­ப­தாக நம்­பு­கி­றேன்," என்­கி­றார் ஜெய்.

அண்­மைய கால­மாக இவ­ரைப் பற்றி கிசு­கி­சுக்­கள் ஏதும் வெளி­யா­வ­தில்லை. மக்­கள் கொரோ­னா­வின் பிடி­யில் சிக்­கி­ய­தால், கிசு­கி­சுக்­களை மறந்து போயிருக்கலாம் என்­கி­றார்.

"என்­னைப் பற்­றிய பல கிசு­கிசுக்­கள் வந்­துள்­ளன. அவற்­றில் சில உண்­மை­தான். மற்­றவை பொய்­யா­னவை. அதே­ச­ம­யம் கிசு­கி­சுக்­கள்­தான் ரசி­கர்­கள் நம்மை மறக்­க­வில்லை என்­பதை உறுதி செய்­கிறது.

"நான் ஏன் பேட்­டி­கள் கொடுப்­ப­தில்லை என்­றும் கூட பல­ரும் கேட்­கி­றார்­கள். பேட்­டி­க­ளின் போது உண்­மை­யைப் பேச வேண்­டுமா அல்­லது பொய் சொல்ல வேண்­டுமா? என்ற குழப்­பம் வந்­து­வி­டு­கிறது. என­வே­தான் தவிர்த்து­வி­டு­கி­றேன்," என்று சொல்­லும் ஜெய், திரு­ம­ணப் பேச்சை எடுத்­தால் மட்­டும் நழுவப் பார்க்­கி­றார்.

முன்பு திரு­ம­ணம் குறித்து கேள்வி எழுப்­பி­னால், "நடி­கர் ஆர்யா திரு­ம­ணம் செய்து கொள்­ளட்­டும். அதன் பிறகு நான் திரு­ம­ணக் கோலத்­தில் நிற்­பேன்," என்­பார். இப்­போது ஆர்­யா­வுக்­குத் திரு­ம­ண­மா­கி­விட்­ட­தால் சிக்­கிக்­கொண்டார்.

"ஆர்யா... நிச்சயமாக திருமணம் செய்யமாட்டார் என நம்பினேன். திடீரென திருமணம் என அறிவித்து விட்டார். இப்போது நான் சுதாரித்துவிட்டேன். நடிகர் சிம்புவின் திருமணத்துக்குப் பிறகுதான் என்னை மணக்கோலத்தில் பார்க்க முடியும்," என்கிறார் ஜெய்.