'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் ஒரு பாடலைப் பாட உள்ளார் வடிவேலு. அந்தப் பாடலை லண்டனில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் பதிவு செய்ய உள்ளனர்.
இதற்காக அப்படக்குழுவினரு டன் லண்டனில் முகாமிட்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நாயகனாக நடிக்க உள்ளார் வடிவேலு. இதையடுத்து இயக்குநர் சுராஜுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் மீண்டும் பழைய வடிவேலுவைப் பார்க்க முடியும் என்கிறார் சுராஜ். இப்படத்துக்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
அண்மையில் சில முக்கியக் காட்சிகளின் படப்பிடிப்புக்காக, 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படக்குழு லண்டன் சென்று சென்னை திரும்பியது. அதன் பின்னர் வடிவேலு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதனால் படப்பணிகள் நிறுத்தப்பட்டன. இப்போது தொற்றில் இருந்து குணமடைந்துவிட்ட தாக அறிவித்துள்ளனர். இதையடுத்து 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கி உள்ளன. மீண்டும் லண்டன் சென்றுள்ளது படக்குழு.
அதற்கு முன்னதாகவே இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் லண்டன் சென்றுவிட்டாராம். அங்கு படத்துக்கான பாடல்களுக்கு மெட்டமைக்க உள்ளதாகத் தகவல்.
வடிவேலு பாட இருக்கும் பாடலின் ஒலிப்பதிவும் அங்குதான் நடக்க உள்ளது.
, :

