பொங்கல் கொண்டாடிய சூர்யா, சிவா

பொங்கல் கொண்டாடிய சூர்யா, சிவா

1 mins read
f5c7e8a7-2522-46bb-89a6-aff7da24d166
பொங்கல் கொண்டாடிய சூர்யா, சிவகார்த்திகேயன். -

சூர்யா, சிவ­கார்த்­தி­கே­யன் உள்­ளிட்ட சிலர் இந்த ஆண்­டும் பொங்­கல் திரு­நாளை உற்­சாகத்­து­டன் கொண்­டாடி உள்­ள­னர்.

நடி­கர் சூர்யா தன் மனைவி ஜோதிகா, சகோ­த­ரர் கார்த்தி யுடன் இணைந்து வீட்­டில் பொங்­கல் வைத்து கொண்­டா­டி­னார். இது தொடர்­பான புகைப்­ப­டத்தை கார்த்தி தனது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

அதில், "நெஞ்­சார்ந்த தைப் பொங்­கல் திரு­நாள் நல்­வாழ்த்துகள்," என அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

நடி­கர் சிவ­கார்த்­தி­கே­ய­னும் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆரா­தனா, மகன் குகன் ஆகி­யோ­ரு­டன் சேர்ந்து வீட்­டில் பொங்­கல் பண்­டி­கையைக் கொண்­டா­டி­ உள்ளார். அந்த புகைப்­படங்­களை தனது சமூக வலைத்­த­ளப் பக்­கங்­களில் அவர் பகிர்ந்­துள்­ளார்.

அந்­தப் புகைப்­ப­டங்­களில் சிவ­கார்த்­திகே­ய­னும் அவ­ரு­டைய மக­னும் பச்சை நிறத்­தில் ஒரே மாதிரி­யாக வேட்டி, சட்டை அணிந்­துள்­ள­னர். மகள் ஆரா­தனா நீல நிற ஆடை­யி­லும் மனைவி ஆர்த்தி பட்­டுப்­பு­ட­வை­யி­லும் உள்­ள­னர்.

இந்­தப் புகைப்­ப­டங்­களை ரசி­கர்­கள் இணை­யத்­தில் பர­வ­லா­கப் பகிர்ந்து வரு­கின்­ற­னர்.

மேலும், சூர்யா, சிவா குடும்பத்தாருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.