இயக்குநர் சங்கரின் மகள் அதிதியை இன்னொரு தாயிடம் இருந்து கிடைத்த சகோதரி என்று கூறியுள்ளார் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா.
முத்தையா இயக்கத்தில் உருவாகும் 'விருமன்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார் அதிதி. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.
'பிகில்' படத்தை அடுத்து இந்திரஜாவுக்கு இந்தப் படத்திலும் கவனிக்கத்தக்க கதாபாத்திரம் அமைந்துள்ளது.
இந்நிலையில், அதிதியுடன் தாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் இந்திரஜா. மேலும், அதில் அதிதியை மிகவும் பாராட்டியுள்ளார்.
"உண்மையான நண்பர்கள் எப்போதும் ஆத்மார்த்தமாக இருப்பார்கள். அதிதி அக்கா... நாம் இருவரும் முந்தைய வரியில் குறிப்பிட் டதுபோல் இருந்துள்ளோம்.
"நீங்கள், படப்பிடிப்பின்போது நான் சந்தித்த ஓர் உண்மையான நல்ல உள்ளம். இன்னொரு தாயிடமிருந்து கிடைத்த சகோதரி. நம்விளையாட்டுகளையும் நகைச்சுவையையும் நினைத்துப் பார்த்து ஏங்குகிறேன். மிகப்பெரிய இயக்குநரின் மகள் என்பதை துளியும் உங்களிடம் பார்த்ததில்லை. அனைவரிடமும் சுமுகமாகப் பழகினீர்கள். உங்களு டன் இருக்கையில் நான் சௌகரிய மாக உணர்ந்தேன். வாழ்த்துகள் அக்கா... உங்களை மிகவும் விரும்பு கிறேன்," என்று தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார் இந்திரஜா.