நடிகர் ஜீவா அடுத்து நடிக்கும் படத்துக்கு 'வரலாறு முக்கியம்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் அவரது இணையாக காஷ்மீரா பர்தேசி ஒப்பந்தமாகி உள்ளார். இவர், 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் நடித்தவர். வி.டி.வி.கணேஷ், கே.எஸ்.ரவிகுமார், சித்திக், சரண்யா பொன் வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சந்தோஷ் ராஜன் இயக்குகிறார். சென்னை, கோவை, ஹைதராபாத், கேரளாவில் முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளனர்.
கார்த்தி, அதிதி சங்கர் இணைந்து நடிக்கும் 'விருமன்' படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியாகி உள்ளது.
அதில் கார்த்தி கோபமான மனநிலையுடன் ஏதோ யோசித்தபடி ஒரு பாறை மீது அமர்ந்துள்ள காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தை தமது 2டி நிறுவனம் சார்பாக சூர்யா தயாரிக்கிறார்.
நார்வே அனைத்துலக தமிழ்த் திரைப்பட விழாவில் 'மாநாடு' படம் நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது.
சிறந்த இயக்குநராக வெங்கட் பிரபு, சிறந்த இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா, சிறந்த வில்லன் நடிகராக எஸ்.ஜே.சூர்யா, சிறந்த படத்தொகுப்புக்காக பிரவீன் ஆகியோருக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கலைச்சிகரம் விருது வழங்கப்பட்டுள்ளது.
விவாகரத்து குறித்து சமந்தாவுடன் பேசிய அந்தத் தருணத்தில், அது சரியான முடிவாக இருந்தது என்று நடிகர் நாக சைதன்யா கூறியுள்ளார்.
அண்மைய பேட்டி ஒன்றில் தமது மணவாழ்க்கை குறித்து சில விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
"சமந்தா மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். அவர் மகிழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில் நானும் அவ்வாறே இருப்பேன்," என கூறியிருந்தார் நாக சைதன்யா.
இவர் நடித்துள்ள 'பங்கராஜு' என்ற புதிய படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இதற்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
'புஷ்பா' படத்தின் முதல் பாகத்தைவிட, இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக இருக்கும் என்கிறார் ராஷ்மிகா மந்தனா.அண்மைய பேட்டி ஒன்றில், முதல் பாகத்துக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களின் அன்புக்குத் தலைவணங்கு வதாக அவர் குறிப்பிட்டுள் ளார். "நாங்கள் மிக கடுமை யாக உழைக்க விரும்பு கிறோம். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட தயாராக உள்ளோம்," என்கிறார் ராஷ்மிகா.
நிவின் பாலி நாயகனாக நடிக்க, ராம் இயக்கும் புதிய படத்துக்காக சென்னைக்கு அருகே ஒரு கோடி ரூபாய் செலவில் ரயில் நிலையம் போன்ற அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

