கொரோனா காலகட்டத்தில்கூட தமிழ் சினிமாவில் புது நாயகிகள் பலர் அறிமுகமாகி உள்ளனர்.இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட புது நாயகிகள் வந்துள்ளதாக கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் கூறும் நிலையில், இளையர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த நாயகிகளில் பிரியங்கா மோகன் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
'டாக்டர்' படத்தின் நாயகியான இவர், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் 'டான்' படத்தில் இணைந்துள்ளார்.
இயல்பான, துறுதுறு நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ள பிரியங்கா, அடுத்து சூர்யாவுடன் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து வருகிறார்.
பொறியியல் படிப்பை முடித்துள்ள இந்த இளம் நாயகியை 'சென்னையின் செல்லப் பெண்' என்று கோடம்பாக்கத்தில் குறிப்பிடுகிறார்கள்.
கன்னடத்தில் 'ஓந்த் கதே ஹெல்லா' படம் மூலம் அறிமுகமான பிரியங்காவுக்கு இப்போது வயது 27.
ராஷ்மிகா மந்தனா
தமிழில் 'சுல்தான்' படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு இப்போது 25 வயதாகிறது. பட்டப்படிப்பில் மனோதத்துவம், ஆங்கில இலக்கியம், ஊடகத்துறை ஆகியவற்றை பாடங்களாகக் கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு, கூகல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட தென் னிந்திய நடிகைகளில், ராஷ்மிகாவுக்குத் தான் முதல் இடம். உலகின் நூறு அழகிய முகங்களின் பட்டியலில் இவர் இடம்பெற் றுள்ளார்.
ரஜீஷா விஜயன்
'கர்ணன்' பட நாயகி. கேரள இறக்குமதியான ரஜீஷா, ஊடகத்துறையில் பட்டப்படிப்பை முடித்தவர். முப்பது வயதாகிவிட்ட நிலையில், தெலுங்கிலும் நடித்து வருகிறார். கார்த்தியின் 'சர்தார்' படத்தில் இவர்தான் நாயகி.
நிதி அகர்வால்
இவரது சொந்த ஊர் ஹைதராபாத். பெங்களூரில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மாடலிங் துறையில் கால்பதித்தார். ஆரம்பமே அமர்க்களமாக ஜெயம் ரவியுடன் 'பூமி', சிம்புவுடன் 'ஈஸ்வரன்' என இரண்டு தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து நடித்து முடித்தார் நிதி. 28 வயதான இவர் 'மிஸ் திவா' என்ற அழகிப் பட்டமும் பெற்றவர்.
மாதுரி ஜெயின்
'சிவகுமாரின் சபதம்' படம் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமான மாதுரி ஜெயினுக்கு 27 வயதாகிறது. இவரது முதல் படம் 'பூமிகா'.
பொறியியல் படிப்பை முடித்துள்ளார். மாடலிங், நடிப்பு என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய மாதுரி, கடந்த 2017ஆம் ஆண்டு 'மிஸ் தென்னிந்தியா' போட்டியின் இறுதிச்சுற்றுவரை முன்னேறியவர். தமிழில் சரளமாகப் பேசுகிறார்.
அபர்ணதி
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பெயரெடுத்தவர் அபர்ணதி. பிரபுதேவாவுடன் 'தேள்' படத்தில் இணைந்து நடித்துள்ளார். 'ஜெயில்' படத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ள அபர் ணதிக்கு வயது 25.
திவ்ய பாரதி
'பேச்சிலர்' பட நாயகி திவ்யபாரதி கோவையைச் சேர்ந்தவர். பிடெக் படிப்பை முடித்துள்ளார். 29 வயதாகிறது. அடுத்து மலையாளம், தமிழில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
டி.ஜே.பானு
'வாழ்' மூலம் பல இளைஞர்களின் மனதில் வாழ்ந்து வரும் டி.ஜே.பானுவுக்கு வயது 28. சொந்த ஊர் மும்பை. நடிப்பு தொடர்பான படிப்பும் பயிற்சியும் மேற்கொண்டவர். சமூக வலைத்தளங்களில் இவரை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.
துஷாரா விஜயன்
'சார்பட்டா பரம்பரை' பட நாயகியாக பாராட்டுகளை அள்ளிய வர். ஆடை வடிவமைப்பு தொடர்பாக படித்துள்ள துஷாராவின் சொந்த ஊர் திண்டுக்கல். அறிமுகப் படத்தின் வெற்றியால் இப்போது வசந்தபாலன் இயக்கத்தில் 'அநீதி', பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்திலும் விக்ரமுக்கு இணையாக ஒரு படத்திலும் நடிக்கிறார் துஷாரா.
ஷிவாத்மிகா ராஜசேகர்
'இதுதாண்டா போலீஸ்' புகழ் நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள். 'ஆனந்தம் விளையாடும் வீடு' மூலம் தமிழுக்கு வந்துள்ளார்.
விரைவில் மருத்துவம் படிக்கப் போகும் ஷிவாத்மிகா இப்போதுதான் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடிப்பதுடன், தயாரிப்பாளராகவும் சாதிப்பதை இந்தப் புத்தாண்டின் இலக்காகக் கொண்டுள்ளார்.
, :
பிரியங்கா மோகன்
ராஷ்மிகா மந்தனா.
மாதுரி ஜெயின்.
நிதி அகர்வால்.
அபர்ணதி.
ரஜீஷா விஜயன்.
திவ்ய பாரதி.
டி.ஜே.பானு.
ஷிவாத்மிகா ராஜசேகர்.
துஷாரா விஜயன்.

