பொங்கல் வெளியீடு: ஆதரவு அளிக்காத ரசிகர்கள்

பொங்கல் வெளியீடு: ஆதரவு அளிக்காத ரசிகர்கள்

1 mins read
822d0c4c-fb15-4d32-a1e6-9ff754287588
'கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தில் சசிகுமார், மடோனா. -

பொங்­கல் திரு­நாளை முன்­னிட்டு வெளி­யீடு கண்ட பெரும்­பா­லான படங்­க­ளுக்கு ரசி­கர்­க­ளின் ஆத­ரவு கிடைக்­க­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

முன்­னணி நடி­கர்­க­ளின் படங்­கள் வெளி­யா­காத கார­ணத்­தால் ரசி­கர்­க­ளி­டம் உற்­சா­கம் இல்லை. அத­னால் திரை­ய­ரங்கில் படம் பார்க்க வேண்­டும் என்ற ஆர்­வ­மும் அவர்­க­ளி­டம் ஏற்­ப­ட­வில்லை என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவரப் புள்­ளி­கள்.

இம்­முறை பொங்­க­லை­யொட்டி 'கார்­பன்', 'கொம்பு வச்ச சிங்­கம்டா', 'நாய் ­சே­கர்' ஆகிய படங்­கள் கடந்த 13ஆம் தேதி வெளி­யீடு கண்­டன. 14ஆம் தேதி­யன்று 'தேள்', 'பாசக்­கா­ரப்­பய' ஆகிய இரு படங்­கள் வெளியாகின. எனி­னும் ரசி­கர்­கள் மத்­தி­யில் இந்­தப் படங்­க­ளுக்கு எதிர்­பார்த்த வர­வேற்பு இல்­லை­யாம்.

சில ஊர்­களில் போது­மான ரசி­கர்­கள் திரை­ய­ரங்­குக்கு வரா­த­தால் புதுப்­ப­டங்­க­ளின் காட்­சி­கள் ரத்து செய்­யப்­பட்­டன. அதி­லும் முதல் நாளன்று, முதல் காட்­சியே ரத்­தா­ன­தாக வெளி­வரும் தக­வல்­கள் கோடம்­பாக்­கத்­தி­ன­ருக்கு கவ­லை­யும் அதிர்ச்­சி­யும் அளித்­துள்­ளன.