திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

1 mins read
205beeb9-83e8-49f4-a7b2-1d11473f5e97
-
multi-img1 of 2

 நடிகர் துல்கர் சல்மான் பாடகராகவும் உருவெடுத் துள்ளார். கலா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹே சினாமிகா' படத்துக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார் துல்கர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள 'அச்சமில்லை அச்சமில்லை' என்று தொடங்கும் அந்தப் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு இளையர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம். இந்தப் பாடலுக்கான ஒலிப்பதிவு 45 நிமிடங்களில் முடிந்துவிட்டது. மிகச் சிறப்பாகப் பாடியதாக துல்கரை பாராட்டி உள்ளார் கோவிந்த் வசந்தா. 'ஹே சினாமிகா' படம் அடுத்த மாதம் 25ஆம் தேதி வெளியாகிறது.

 சினிமா வாய்ப்புகள் கிடைக் கின்றனவோ இல்லையோ, எந்நேரமும் ஏதாவது ஓர் உருப்படியான வேலையைச் செய்துகொண்டிருக்கிறார் ரம்யா பாண்டியன். தன் வீட்டு மாடியிலேயே காய்கறித் தோட்டம் அமைத்துள்ள அவர், அண்மைக் காலமாக அதில் பல்வேறு பயிர்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில், பொங்கல் தினத்தன்று மாடித்தோட்டத்தில் வளர்ந்த மஞ்சளை அறுவடை செய்துள்ளார். தமக்கு வளமான விளைச்சலைத் தந்துள்ள இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டு, மஞ்சளுடன் தாம் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ளார். தற்போது மலையாளத்தில் 'இடும்பன்காரி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்து மம்முட்டியுடன் நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.