காஷ்மீரா: விஜய்யை ரொம்பப் பிடிக்கும்

காஷ்மீரா: விஜய்யை ரொம்பப் பிடிக்கும்

2 mins read
1ac9b829-2a94-4ff0-b0cd-a663391872b7
-

விஜய்தான் தனக்­குப் பிடித்­த­மான நடி­கர் என்கிறார் இளம் நாயகி காஷ்­மீரா பர்­தேசி.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளி­யான 'சிவப்பு மஞ்­சள் பச்சை' படத்­தின் மூலம் தமி­ழில் அறி­மு­க­மான இவர், அதில் ஜிவி.பிர­காஷ் ஜோடி­யாக நடித்­தி­ருந்­தார்.

கொரோனா நெருக்­கடி வேளை­யில், சில வாய்ப்­பு­கள் தேடி­வந்த போதும், அவற்றை ஏற்­க­வில்­லை­யாம். தொற்­றுப் பர­வல் அச்­சுறுத்­தல் குறைந்­த­பி­றகு, 'வசந்த முல்லை', 'வர­லாறு முக்­கி­யம்', 'அன்­ப­றிவு', கன்­னடத்­தில் 'ரைடர்' என்று வரி­சை­யாக பல படங்­களை ஒப்­புக்­கொண்டு ஓய்­வின்றி நடித்து வரு­கி­றார் காஷ்­மீரா.

"விஜய் சார் நடித்த படங்­களை ஒன்­று­வி­டா­மல் பார்த்­து­வி­டு­வேன். அவ­ரது எளி­மை­யான ஸ்டைல் எனக்­குப் பிடித்­த­மா­னது.

அவ­ரு­டன் நடிக்க வாய்ப்பு கிடைத்­தால், மற்ற படங்­களை ஒதுக்­கி­விட்டு, அதற்கு முன்­னு­ரிமை அளிப்­பேன்," என்­கி­றார் காஷ்­மீரா.

'வசந்த முல்லை' படம் குறித்து?

"இது ஒரு­வ­கை­யில் மனோ­தத்­துவ ரீதி­யி­லான ஒரு திகில் படம். பாபி சிம்ஹாதான் நாய­கன். இரு­வ­ரும் தம்­ப­தி­ய­ராக நடித்­துள்­ளோம். கண­வ­னுக்கு அனைத்து வகை­யி­லும் ஆத­ரவு அளிக்­கும் மனை­வி­யாக நடித்­தது நல்ல அனு­ப­வ­மாக இருந்­தது.

"அதே­ச­ம­யம் கார் துரத்­தல் காட்­சி­கள், நெடுஞ்­சா­லை­யில் நடக்கும் பர­ப­ரப்­புச் சம்­ப­வங்­கள் என்று இந்­தப் படத்­தில் வணிக ரீதி­யி­லான அம்­சங்­களும் நிறை­யவே உள்­ளன," என்கிறார்.

ஜீவா­வு­டன் நடிப்­பது குறித்து?

"அவ­ருக்கு ஜோடி­யாக 'வர­லாறு முக்­கி­யம்' படத்­தில் நடிக்­கி­றேன். இதன் முதல்­தோற்றச் சுவ­ரொட்டி அண்­மை­யில் வெளி­யா­னது.

"வண்­ண­ம­ய­மாகக் காட்சி அளிக்­கும் அந்­தச் சுவ­ரொட்­டிக்கு ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்பு கிடைத்­தி­ருப்­ப­தாக படக்­கு­ழு­வி­னர் தெரி­வித்­த­போது உற்­சா­க­மாக இருந்­தது. பட­மும் அப்­ப­டித்­தான் இருக்­கும்.

"முதன்­மு­றை­யாக இதில் எனக்கு கேர­ளப் பெண் கதா­பாத்­தி­ரம் அமைந்­துள்­ளது. கோவை­யில்­தான் படப்­பி­டிப்பை நடத்­தி­னர். தமிழ்த் திரை­யு­ல­கில் ஒவ்­வொரு படத்­தை­யும் நன்கு திட்­ட­மிட்டு படத்தை குறித்த நேரத்­தில் முடிக்­கி­றார்­கள்.

"அனை­வ­ரும் இயல்­பா­கப் பேசிப் பழ­கு­கி­றார்­கள். இது எனக்­குப் பிடித்­தி­ருக்­கிறது," என்று சொல்­லும் காஷ்­மீரா, தற்­போது ஒப்புக்­கொண்­டுள்ள படங்­களை முடித்த பிறகே அடுத்­த­டுத்த வாய்ப்­பு­களை ஏற்­பது என்று முடிவு செய்­துள்­ளா­ராம். ஆடை வடி­வ­மைப்­பில்­தான் காஷ்­மீ­ரா­வுக்கு ஆர்­வம் அதி­கம். எதிர்­கா­லத்­தில் ஒரு நிறு­வ­னம் தொடங்க வேண்­டும் என விரும்­பு­கி­றார்.

"அது­வரை சும்மா இருக்க முடி­யாது அல்­லவா... அத­னால்­தான் 'வொர்த்' என்ற பிராண்ட் ஒன்றை உரு­வாக்கி, ஓய்வு நேரங்­களில் சில வடி­வ­மைப்­பு­களை உரு­வாக்கி வரு­கி­றேன். திரை­யு­ல­கில் இருந்து வில­கிய பின்­னர் என்­னி­டம் இருந்து ரசி­கர்­களை மயக்­கக்­கூ­டிய வடி­வ­மைப்­பு­கள் வெளி­வ­ரும்," என்­கி­றார் காஷ்­மீரா பர்­தேசி.

சிறு குறிப்பு: காஷ்­மீரா என்­றால் அழகு என்று அர்த்­த­மாம்.