சிவா, சேதுபதியுடன் கமல்ஹாசன்

சிவா, சேதுபதியுடன் கமல்ஹாசன்

1 mins read
98ab3e7a-e219-4e4f-ac08-6069b0e08e6d
விஜய்சேதுபதி, கமல். -
multi-img1 of 2

கமல்­ஹா­ச­னின் ராஜ்­க­மல் இன்­டர்­நே­ஷ­னல் நிறு­வ­னத்­து­டன் இணைந்து 'சோனி இந்­தியா' நிறு­வ­னம் தமி­ழில் திரைப்­ப­டங்­க­ளைத் தயா­ரிக்க உள்­ளது.

இவர்­க­ளின் முதல் தயா­ரிப்­பில் உரு­வாக உள்ள படத்­தில் சிவ­கார்த்தி­கே­யன் நடிக்க உள்­ளார்.

கமல்­ஹா­ச­னு­டன் ஏதே­னும் ஒரு வகை­யில் இணைந்து ஒரு படத்­தில் பணி­யாற்­று­வது மகிழ்ச்சி அளிப்­ப­தாக சிவ­கார்த்­தி­கே­யன் கூறு­கி­றார்.

இதற்­கி­டையே, விஜய் சேது­ப­தியை 'அடுத்த தலை­மு­றைக்­கான நடி­கர்' என்று பாராட்டி உள்­ளார் கமல்­ஹா­சன். மேலும், நேற்று முன்­தி­னம் சேது­ப­தி­யின் பிறந்­த­நா­ளை­யொட்டி வாழ்த்­தும் தெரி­வித்­துள்­ளார்.

சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டிருப்பவர் தம்பி விஜய் சேதுபதி. கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் அடுத்த தலைமுறையினரில் முக்கியமானவர். அவரது தேடலும் துணிச்சலும் வீண் போகாது," என கமல் பாராட்டி இருப்பது விஜய் சேதுபதியை நெகிழ வைத்துள்ளது.