திரைத் துளி­கள்

 படங்களில் நடித்துக்கொண்டே தமது தயாரிப்பு நிறுவனத்தை நடத்துவது, அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுவது ஆகியவற்றுக்கு மத்தியில் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார். 'சும்மா சுர்ருனு' என்று தொடங்கும் அந்தப் பாடலைக் கேட்ட பலரும் நன்றாக இருப்பதாகப் பாராட்டி உள்ளனர். இந்தப் படத்துக்காக விக்னேஷ் சிவன், யுகபாரதி ஆகியோரும் பாடல் எழுதி உள்ளனர். அவர்களுடன் பாடலாசிரியர்கள் பட்டியலில் சிவா பெயரும் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பு 'கோலமாவு கோகிலா' படத்தில், 'எனக்கு இப்போ கல்யாண வயசு', 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் 'காந்த கண்ணழகி' போன்ற பாடல்களை எழுதியுள்ளார் சிவா.

எதிர்வரும் பிப்ரவரி 4ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகிறது.

 விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் புதிய சுவரொட்டிகள் எதிர்வரும் 26ஆம் தேதி வெளியாகின்றன. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, பொங்கல் பண்டிகையையொட்டி புதிய சுவரொட்டிகளை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். அச்சமயம் 'வலிமை', 'ஆர்ஆர்ஆர்' உள்ளிட்ட படங்கள் வெளியாக இருந்ததால், 'பீஸ்ட்' சுவரொட்டி வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இந்தியக் குடியரசு தினத்தன்று அச்சுவரொட்டிகள் வெளியாக உள்ளன.

 'அங்காடி தெரு' படம் வெளியான பிறகு அதில் நாயகனாக நடித்த மகேஷ், தமிழ்த் திரையுலகில் ஒரு வெற்றி வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காமல் சோர்ந்துபோனார் மகேஷ். அதன் பின்னர் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக்கொண்ட அவருக்கு எதுவும் வெற்றிப்படமாக அமையவில்லை. இந்நிலை யில், 'ஏவாள்' என்ற புதுப் படத்தில் ஐந்து நாயகி களுடன் நடித்துள்ளார் மகேஷ். மோக்‌ஷா, கௌரி சர்மா, மதுமதி, அக்‌ஷரா ராஜ், பர்சிதா சின்கா, ஆரத்தி கிருஷ்ணா ஆகிய ஐந்து நாயகிகளுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளித்துள்ளாராம் இயக்குநர் ஜித்தேஷ். நீளமான தாடி வைத்திருப்பவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள பிரவீன் பரமேஸ்வர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இது சைக்கோத்தனமும் திகிலும் கலந்த காதல் படமாம்.

 ஆஸ்கார் விருது அமைப்பின் யுடியூப் சேனலில் 'சீன் அட் தி அகாடமி' என்ற தலைப்பில் சில காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதில், சூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' திரைப்படத்தின் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 இயக்குநர் சங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து இயக்கி வரும் படத்தின் மின்னிலக்க விநியோக உரிமை ரூ.200 கோடிக்கு விலை பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்தை 200 கோடி ரூபாய் செலவில்தான் எடுத்து வருகின்ற னர். எனவே திரையரங்க வசூல் முழுவதும் லாபம்தான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!