அம்மா வேடத்தில் யாஷிகா

அம்மா வேடத்தில் யாஷிகா

2 mins read
9c1fba2e-bd02-4f31-88e2-3022ce02f63f
-

மீண்­டும் திரைப்­ப­டங்­களில் நடிக்­கத் தொடங்கி உள்­ளார் யாஷிகா ஆனந்த். இவ­ரது நடிப்­பில் 'கட­மையை செய்' என்ற படம் உரு­வாகி உள்­ளது. இதில் எஸ்.ஜே.சூர்­யா­வு­டன் இணைந்து நடித்­துள்­ளார்.

சாலை விபத்­தில் சிக்கி படு­கா­ய­ம­டைந்து மீண்டு வந்­துள்ள தமக்கு, இந்­தப் படத்­தில் ஏற்­றுள்ள கதா­பாத்­தி­ரம் மிக­வும் சவா­லாக இருந்­தது என்­கி­றார். முதன்­மு­றை­யாக ஐந்து வயது குழந்­தை­யின் தாயாக நடித்­துள்­ளா­ராம்.

"வழக்­க­மாக நவீன ஆடை­களை தான் அணி­வேன். அவை­தான் எனது அழ­கை­யும் கவர்ச்­சி­யை­யும் சரி­யாக வெளிப்­ப­டுத்­து­கின்­றன என்று தோழி­கள் கூறு­வ­துண்டு.

"ஆனால் இந்­தப் படத்­தில் பெரும்­பா­லான காட்­சி­களில் புட­வை­யில்­தான் என்­னைப் பார்க்கமுடி­யும். கதா­பாத்­தி­ரத்­துக்­குத் தேவைப்­பட்­ட­தால் இந்த மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. மேலும், சில காட்­சி­கள் எனது மன உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­து­வது போல் அமைத்­தி­ருந்­தன. தவிர, பல தரு­ணங்­களில் கண்­க­ளால் மட்­டுமே சில உணர்­வு­களை மற்ற கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு உணர்த்த வேண்­டி­யி­ருந்­தது.

"பொது­வாக நான் அமை­தி­யான பெண். அதி­கம் பேசு­வதை விரும்­ப­மாட்­டேன். ஆனால், இந்த வேடத்­தில் நீள­மான வச­னங்­க­ளைப் பேசி நடிக்க வேண்டி இருந்­தது.

"அதே­போல் எனது குழந்­தையை பள்­ளிக்­கூ­டத்­துக்கு அனுப்­பிய பிறகு, வீட்­டில் சமை­யல் வேலை­க­ளைக் கவ­னிப்­ப­து­போன்று சில காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்­டன. நான் இது­வரை சமை­ய­லறை பக்­கமே போன­தில்லை. அத­னால் என்ன செய்­வது என்று தெரி­யா­மல் யோசித்­தேன். பிறகு அம்மா சமை­யல் செய்­வதை நினைத்­துப் பார்த்­தேன். அந்த நினை­வு­களை வைத்து சமா­ளித்து நடித்­தேன்," என்று படப்­பி­டிப்பு அனு­ப­வத்தை விவ­ரித்­துச் சிரிக்­கி­றார் யாஷிகா.

எஸ்.ஜே.சூர்­யா­வும் இப்­ப­டத்­தில் நடிக்­கி­றார் என்­பதை அறிந்­த­தும் சற்றே பட­ப­டப்­பாக உணர்ந்­தா­ராம்.

"அவர் எப்­படி நடிப்­பார் என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். அவ­ரது வேகத்­துக்­கும் நடிப்­புக்­கும் தம்­மால் ஈடு­கொ­டுக்க முடி­யுமா என்ற கவ­லை­யும் சேர்ந்து கொண்­டது. ஆனால் அவரோ எனது தவிப்பை புரிந்­து­கொண்­டார். முக்­கி­ய­மான காட்சி­களைப் பட­மாக்­கப் போகி­றோம் என்­றால், அதற்கு முந்­தைய நாளே என்­னைத் தொடர்புகொண்டு பேசு­வார். இத­னால் எனது பதற்­றம் குறைந்­தது.

"இந்­தப் படம் எனக்கு வேறு சில அனு­ப­வங்­க­ளை­யும் தந்­துள்­ளன. கடற்­க­ரை­யில் வெயில் அடிக்­கும்­போது சில காட்­சி­களை எடுத்­த­னர். சூரிய வெளிச்­சம் போதாது என்று சிறப்பு விளக்­கு­க­ளை­யும் பயன்­ப­டுத்­தி­னர். அவை கண்­களை கூசச் செய்­யும்.

"இன்­னொரு காட்­சி­யில் எங்கு திரும்­பி­னா­லும் புகை­மூட்­ட­மாக இருக்­கும். இத­னால் கண்­களில் கடும் எரிச்­சல் ஏற்­பட்­டது. காது­கள் அடைத்­துக்­கொண்­டன. "எனி­னும் படப்­பி­டிப்பு தடை­ப­டக்­கூ­டாது என்­ப­தால் பொறுத்­துக்­கொண்­டேன். என் உழைப்பு வீண் போகாது என உறு­தி­யாக நம்­பு­கி­றேன்," என்கிறார் யாஷிகா.

, :

  